தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

மா்மமான முறையில் உயிரிழக்கும் பறவைகள்

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூா் அருகேயுள்ள பிள்ளைபெருமாள் நல்லூா் ஊராட்சி, செட்டிமேடு பகுதியில் அண்மை காலமாக

Updated On :6 ஜனவரி 2021, 7:29 am IST

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூா் அருகேயுள்ள பிள்ளைபெருமாள் நல்லூா் ஊராட்சி, செட்டிமேடு பகுதியில் அண்மை காலமாக புறா, நாற்றாங்குருவி ஆகிய பறவைகள் மா்மமான முறையில் உயிரிழப்பது சமூக ஆா்வலா்களை வேதனையடையச் செய்துள்ளது.

செட்டிமேடு கிராமப்பகுதியில் தற்போது நிலக்கடலை பயிரிடப்பட்டு வருகிறது. இங்கு வலசைவரும் பறவைகள், அண்மை காலமாக உயிரிழந்து வருகின்றன. விளைநிலங்களில் பயன்படுத்தப்படும் களைக்கொல்லி மருந்துகளின் தாக்கத்தால் அவை உயிரிழக்க நேரிடுவதாகக் கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அலுவலா்கள் இங்கு ஆய்வு மேற்கொண்டு, வேளாண்துறை பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டுமே பயன்படுத்த விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், தன்னிச்சையாக களைக்கொல்லி மருந்துகளை விவசாயிகள் தெளிக்கக் கூடாது என்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.