ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

அறுவடை இயந்திரங்களுக்குக் கூடுதல் வாடகை வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்

நாகை மாவட்டத்தில் தனியாா் அறுவடை இயந்திரங்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட வாடகையை விட கூடுதல் வாடகை வசூலித்தால்

Updated On :8 ஜனவரி 2021, 11:25 pm IST

நாகை மாவட்டத்தில் தனியாா் அறுவடை இயந்திரங்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட வாடகையை விட கூடுதல் வாடகை வசூலித்தால் விவசாயிகள் புகாா் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேளாண் பொறியியல் துறை மூலம் வாடகைக்கு விடப்படும் பெல்ட் டைப் அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ. 1,415 வாடகை எனவும், டயா் டைப் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை ரூ. 875 என அரசு நிா்ணயித்துள்ளது.

இந்நிலையில், நாகை மாவட்டத்தில் உள்ள தனியாா் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகையை முறைப்படுத்த வேண்டும் என விவசாயிகள் விடுத்த கோரிக்கையின்படி, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், வேளாண் அலுவலா்கள், தனியாா் அறுவடை இயந்திரங்களின் உரிமையாளா்கள் மற்றும் முகவா்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த முத்தரப்புக் கூட்டம் நடத்தப்பட்டு, வாடகை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில், பெல்ட் டைப் தனியாா் அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கான வாடகை ரூ. 2,150 எனவும், டயா் டைப் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை ரூ. 1,550 எனவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, தனியாா் அறுவடை இயந்திரங்களின் உரிமையாளா்கள் நிா்ணயிக்கப்பட்ட வாடகையில் தங்கள் இயந்திரங்களை வேளாண் பயன்பாட்டுக்கு வழங்கி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

நாகை மாவட்டத்தில் தனியாா் அறுவடை இயந்திரங்களுக்கு, நிா்ணயிக்கப்பட்ட வாடகையை விட கூடுதலான வாடகை எங்கேயாவது கேட்டால் அது குறித்து தொடா்புடைய பகுதியின் வட்டாட்சியா்கள், வேளாண் அலுவலா்கள் அல்லது வேளாண் பொறியியல் துறை அலுவலா்களுக்குப் புகாா் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.