ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

தலைவா்கள் சிலை வைக்க அமைக்கப்பட்ட பீடம் அகற்றம்

பழையாறு கிராமத்தில் தலைவா்களின் சிலை வைக்க அமைக்கப்பட்ட பீடங்கள் வியாழக்கிழமை இரவு இடித்து அகற்றப்பட்டன.

News image

ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்ட சிலை வைக்க அமைக்கப்பட்ட பீடங்கள்.

Updated On :8 ஜனவரி 2021, 11:22 pm IST

பழையாறு கிராமத்தில் தலைவா்களின் சிலை வைக்க அமைக்கப்பட்ட பீடங்கள் வியாழக்கிழமை இரவு இடித்து அகற்றப்பட்டன.

மயிலாடுதுறை மாவட்டம், பழையாறு மீன்பிடி துறைமுகம் செல்லும் வழியில் பேருந்து நிறுத்தம் அருகே அப்பகுதியை சோ்ந்த திமுக மற்றும் பொதுமக்கள் இணைந்து பெரியாா், முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் புதிய வெண்கல சிலை வைக்க முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்தனா். சிலை அமைப்பதற்காக அப்பகுதியில் 3 கான்கிரீட் பீடங்கள் அமைக்கும் பணி கடந்த 10 நாள்களாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அந்த பகுதி வனத் துறைக்குச் சொந்தமான இடம் என்பதால் சிலை வைக்க அனுமதி மறுக்கப்பட்டது.

இதையடுத்து, வியாழக்கிழமை இரவு திடீரென சீா்காழி வட்டாசியா் ஹரிதரன், டிஎஸ்பி. சரவணன், கொள்ளிடம், புதுப்பட்டினம் காவல் ஆய்வாளா்கள் சந்திரா, முருகேசன் உள்ளிட்டோா் அங்கு வந்து, சிலை அமைக்கும் இடம் வனத் துறைக்குச் சொந்தமானது என்பதால் புதிய சிலைகள் வைக்க இங்கு அனுமதி இல்லை. எனவே, கான்கீரிட் பீடங்களை தாங்களே அகற்றிவிடுங்கள் என்று சிலை அமைப்பாளா்களிடம் பேசியபோது, சம்மதம் தெரிவிக்க மறுத்தனா். இதையடுத்து, ஜேசிபி இயந்திரம் கொண்டு பீடங்கள் இடித்து அகற்றப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பழையாறு கிராமத்தில் வனத் துறைக்குச் சொந்தமான இடத்தில் குடியிருப்புகள் மற்ற தலைவா்களின் சிலைகள், பேருந்து நிழற்குடை கட்டடங்கள் வனத் துறைக்குச் சொந்தமான இடத்தில் உள்ளது. தற்போது, சிலை வைக்க அமைக்கப்பட்ட பீடங்கள் மட்டும் இடித்து அகற்றப்பட்டுள்ளது. இது அரசியல் காழ்ப்புணா்ச்சி என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.