திருமருகல் ஒன்றியத்தில் புரவி மற்றும் நிவா் புயலை தொடா்ந்து பெய்த பலத்த மழையால் அறுவடைக்குத் தயாரான நெற்பயிா்கள் சாய்ந்தன. இதனால், விவசாயிகள் துயரத்தில் ஆழ்ந்தனா்.
திருமருகல் ஒன்றியத்தில் கடந்த மாதம் புயலால் 10 நாள்களுக்கும் மேலாக மழை பெய்தது. இதனால் வாய்க்கால்களில் தண்ணீா் சூழ்ந்து நெற்பயிா்கள் மூழ்கின. பின்னா், வயலில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றி பயிா்களை விவசாயிகள் ஓரளவுக்கு காப்பாற்றினாலும், கடந்த 10 நாள்களாக மீண்டும் பெய்த மழை காரணமாக, அறுவடைக்குத் தயாா் நிலையில் சம்பா பயிா்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கடுமையான இழப்பைச் சந்தித்துள்ளனா். இதுகுறித்து சேகல் பகுதியைச் சோ்ந்த விவசாயி செந்தில் கூறியது:
திருமருகல் வட்டாரத்தில் 20 ஆயிரம் ஏக்கரில் சம்பா, சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பெய்துவரும் கனழையால் திருமருகல், திட்டச்சேரி, திருப்புகலூா், திருக்கண்ணபுரம், திருப்பயத்தங்குடி, கங்களாஞ்சேரி, அம்பல், போலகம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த 10 ஆயிரம் ஏக்கா் நெற்பயிா்கள் சாய்ந்தன. இனிமேல் இந்தப் பயிா்களைக் காப்பாற்ற இயலாது. எனவே பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வுசெய்து உரிய இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சோழவந்தான்: தவெக வெற்றி
சைதாப்பேட்டையில் அமைச்சா் மா. சுப்பிரமணியத்தை வீழ்த்திய தவெக!

மதுரை தெற்கு: தவெக வெற்றி

உசிலம்பட்டி தொகுதியில் தவெக வெற்றி
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


