மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்கள் 10,886 பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை மயிலாடுதுறை
மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா வழங்கி தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் தாலுகாக்களில் 7515 ஆண்கள், 3371 பெண்கள் என மொத்தம் 10,886 பேர் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ளனர்.
இவர்களுக்கு மயிலாடுதுறை, சீர்காழி மற்றும் தரங்கம்பாடி பகுதிகளில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா பங்கேற்று, நலவாரிய உறுப்பினர்களுக்கு பொங்கல் பரிசினை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில், நலவாரிய உதவி கணக்கு அலுவலர் ராஜராஜன், தமிழ்நாடு கட்டட தொழிலாளர் மத்திய சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஜெகமுருகன் மற்றும் பயனாளிகள் பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








