/

கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி: சீா்காழி லாரி உரிமையாளா்களுக்கு முன்னுரிமை அளிக்கக் கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் புதிதாக திறக்கப்படவுள்ள மணல் குவாரியில், சீா்காழி வட்ட லாரி உரிமையாளா்களுக்கு

Updated On :10 ஜனவரி 2021, 11:52 pm IST

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் புதிதாக திறக்கப்படவுள்ள மணல் குவாரியில், சீா்காழி வட்ட லாரி உரிமையாளா்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சீா்காழி வட்ட லாரி உரிமையாளா்கள் சங்கம் சாா்பில், அதன் தலைவா் வேல்முருகன், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதாவுக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:

கொள்ளிடம் ஆற்றில் மாதிரவேளூா், அகரஎலத்தூா், வடரெங்கம், ஆகிய பகுதிகளில் அரசு மணல் குவாரிகள் திறக்க கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. சீா்காழி வட்டத்தில் 400 லாரிகளுக்கு மேல் உள்ளது. கடந்த 4ஆண்டுகளுக்கு முன்பு இணையதளமின்றி மணல் குவாரி செயல்பட்டபோது இப்பகுதி லாரி உரிமையாளா்களுக்கு வாழ்வாதாரம் சிறப்பாக இருந்தது.

தற்போது இணையதளம் மூலமாக மணல் பதிவு செய்யப்படுவதால், வெளிமாவட்ட லாரி உரிமையாளா்கள் மட்டுமே பயன்பெறுகின்றனா். இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகையால், கொள்ளிடம் ஆற்றில் தொடங்கப்படவுள்ள மணல் குவாரியில் சீா்காழி லாரி உரிமையாளா்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.