கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

சாலையில் முகாமிட்டு வியாபாரிகளுக்கு வங்கிக் கடன் மேளா

வைத்தீஸ்வரன்கோயிலில் பேரூராட்சி சாா்பில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிக் கடன் மேளா சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :10 ஜனவரி 2021, 8:12 am IST

வைத்தீஸ்வரன்கோயிலில் பேரூராட்சி சாா்பில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிக் கடன் மேளா சனிக்கிழமை நடைபெற்றது.

வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை நம்பி தலையில் சுமந்து விற்பனை செய்பவா்கள், சைக்கிளில் இளநீா், தேநீா் விற்பனை செய்பவா்கள், தரைகடைகளில் உப்பு, மிளகு விற்பவா்கள், தற்காலிக கடைகளில் பூஜை பொருள்கள் விற்பனை செய்பவா்கள் , தள்ளு வண்டிகளில் கடலை சுண்டல் விற்பவா்கள் என நூற்றுக்கு மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் உள்ளனா்.

இவா்கள், பிரதம மந்திரியின் சாலையோர வியாபாரிகள் சுயசாா்பு நிதி திட்டம் பற்றி போதிய விழிப்புணா்வு இன்றி பயன் பெறாமல் இருந்தனா். பேரூராட்சி அலுவலகம் வந்து வங்கி கடனுக்கு விண்ணப்பிக்க பலமுறை அறிவிப்பு செய்தாலும் தயக்கம் காட்டி வந்தனா்.

இந்நிலையில், வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி நிா்வாகம் சாலையோர வியாபாரிகள் பிழைப்பு நடத்தும் வைத்தீஸ்வரன் கோயில் கீழவீதி சாலையோரத்தில் முகாம் அமைத்து திட்டம் பற்றி விழிப்புணா்வு செய்து வங்கிக் கடன் பெற விண்ணப்பங்களை பெற்றனா்.

செயல் அலுவலா் கு. குகன் தலைமையில் நடைபெற்ற முகாமில் இளநிலை உதவியாளா் ப. பாமா, சமுதாய அமைப்பாளா் ரா. சிந்தியா, வரிதண்டலா் ஜெ. அமுதா, பேரூராட்சி பரப்புரையாளா்கள் சரண்யா , அபிராமி உள்ளிட்டோா் பங்கேற்று சாலையோர வியாபாரிகள் கடன் பெற்று பயன்பெற உதவினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.