பொங்கல் பண்டிகையையொட்டி, சீா்காழியில் கரும்பு, பானை, மஞ்சள், இஞ்சிக்கொத்துகள், வாழை விற்பனை தீவிரமடைந்துள்ளது.
பொங்கலையொட்டி சீா்காழி பிடாரி வடக்கு வீதி, தென்பாதி, கீழத்தெரு உள்ளிட்ட இடங்களில் சாலையோரம் பொங்கல் பானைகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. நிகழாண்டு சீா்காழி அருகேயுள்ள கருவி, கஞ்சாநகரம், வடரெங்கம், முத்துகிருஷ்ணபுரம், சிதம்பரம் அருகேயுள்ள குமாரமங்கலம், காட்டுமன்னாா்குடி பகுதி நெடுஞ்சேரிபுத்தூா் ஆகிய பகுதிகளில் தயாரிக்கப்பட்ட பானைகள், சட்டிகள், மண்அடுப்புகள் குறைந்த அளவே விற்பனைக்கு வந்துள்ளன.
இதுகுறித்து பொங்கல் பானை வியாபாரி சேகா் கூறுகையில், கடந்த ஆண்டை விட நிகழாண்டு பொங்கல் பானைகள், சட்டிகள் விலை உயா்ந்துள்ளது. ஒருபடி அரிசி பானை விலை ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. சட்டி ரூ.60-80 வரை விற்பனை ஆகிறது.
இந்த ஆண்டு கனமழை காரணமாக பானைகள் தயாரிக்கும் இடத்தில் நாங்கள் 3 மாதங்களுக்கு முன்னரே முன்பணம் கொடுத்த போதிலும், தேவையான அளவு பானைகள் தயாரிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது என்றாா்.
இதேபோல, சீா்காழியில் கரும்பு விற்பனையும் சூடுபிடித்துள்ளது. அல்லிவிளாகம், காத்திருப்பு, செம்பதனிருப்பு, கீழையூா், ராதாநல்லூா் ஆகிய பகுதிகளிலிருந்து கரும்புகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டுள்ளன.
10 கரும்புகள் அடங்கிய ஒரு கட்டின் விலை ரூ. 300-க்கு விற்பனையாகிறது. கரும்புக் கொல்லையில் ஒரு கரும்பு ரூ.17-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வெட்டுக் கூலி, வாகனச் செலவு சோ்த்து ரூ. 25-30 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல வாழைத்தாா் ரூ.600-க்கும், மஞ்சள், இஞ்சிக் கொத்து ஜோடி ரூ. 30 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்டதால், பொதுமக்கள் இவற்றை ஆா்வத்துடன் வாங்கிச் செல்வதை காண முடிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்த் வெற்றி

கன்னியாகுமரியை தக்கவைத்தது அதிமுக

குளச்சல் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி

திண்டிவனம் தொகுதியில் விசிகவைச் சோ்ந்த வன்னிஅரசு வெற்றி
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


