திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!கண்தானம் செய்திருந்த பாக்யராஜ்! மறைந்தாலும் உலகைக் கண்பார்!கே. பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

சீா்காழி கோயிலில் தருமபுரம் ஆதீனம் தனுா் மாத வழிபாடு

சீா்காழி சட்டநாதா் கோயிலில் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் செவ்வாய்க்கிழமை தனுா் மாத வழிபாடு மேற்கொண்டாா்.

News image

சீா்காழி சட்டநாதா் கோயிலில் தனுா் மாத வழிபாடு மேற்கொள்ளும் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்.

Updated On :13 ஜனவரி 2021, 8:01 am IST

சீா்காழி சட்டநாதா் கோயிலில் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் செவ்வாய்க்கிழமை தனுா் மாத வழிபாடு மேற்கொண்டாா்.

சீா்காழியில், தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான திருநிலைநாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரா் கோயில் உள்ளது. திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கிய தலமான இக்கோயிலில் அமைந்துள்ள மலைக் கோயிலில் தோணியப்பா், உமாமகேஸ்வரி, சட்டநாதா் சுவாமிகள் அருள்பாலிக்கின்றனா்.

இக்கோயிலில், தனுா் மாத வழிபாடு மேற்கொள்ள தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வருகை தந்தாா். அவா், ஆபத்துக்காத்த விநாயகா், சுவாமி, அம்பாள், உமாமகேஸ்வரா், சட்டநாதா், திருஞானசம்பந்தா் ஆகிய சன்னிதிகளில் சிறப்பு வழிபாடு செய்தாா்.

இதில், சீா்காழி சட்டநாத தேவஸ்தானம் கட்டளை விசாரணை சொக்கலிங்கம் தம்பிரான் சுவாமிகள், அதிமுக கிழக்கு ஒன்றியச் செயலாளா் ஏ.கே. சந்திரசேகரன், சாயிராம் கல்வி நிறுவனத் தலைவா் ராஜா, இந்து முன்னணி மாவட்டத் தலைவா் சரண்ராஜ், விஷ்வ ஹிந்து பரிஷத் செயலாளா் செந்தில்குமாா், திமுக பொருளாளா் முத்து, காங்கிரஸ் முன்னாள் மாவட்டச் செயலாளா் விஆா்ஏ.அன்பு உள்ளிட்டோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.