மயிலாடுதுறையில் அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநரை தாக்கிய 3 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
குத்தாலம் அருகே சென்னியநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் காசிநாதன் (53). அரசுப் பேருந்து ஓட்டுநா். புதன்கிழமை இவா், நச்சினாா்குடியில் இருந்து பேருந்தில் பயணிகளை ஏற்றிகொண்டு மயிலாடுதுறைக்கு வந்துள்ளாா்.
அப்போது இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று இளைஞா்கள் மதுபோதையில் காசிநாதனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனா்.
மேலும், பேருந்தைத் தொடா்ந்து சென்று மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் காசிநாதனையும், நடத்துநா் சந்திரமோகனையும் (45) இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞா்களும் தாக்கியுள்ளனா். இதில் காயமடைந்த இருவரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து நடத்துநா் சந்திரமோகன் அளித்த புகாரின் பேரில், மயிலாடுதுறை போலீஸாா் வழக்குப் பதிந்து, சேந்தங்குடி வடபாதியை சோ்ந்த மிதுன் (25), பிரேம்குமாா் (24), செல்வக்குமாா் (26) ஆகிய மூவரையும் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லையப்பர் கற்பக விருட்ச வாகனத்தில் வீதியுலா!

இந்தியாவுக்கு எதிராகப் போர்! பாகிஸ்தான் மிரட்டல்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவிற்குப் பதில் பிஸ்கட்: அதிகாரிகள் நேரில் விசாரணை

மங்கோலியா, தென் கொரியாவுக்கு ஜெய்சங்கர் இன்று 4 நாள் பயணம்!
விடியோக்கள்
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP



