/

மின்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

மின்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா புதன்கிழமை வழங்கினாா்.

News image

மின்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை வழங்கிய ஆட்சியா் இரா. லலிதா.

Updated On :14 ஜனவரி 2021, 1:48 am

மின்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா புதன்கிழமை வழங்கினாா்.

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி வட்டம் மாதானம் மின்வாரிய பிரிவு அலுவலகத்துக்குள்பட்ட பச்சைபெருமாநல்லூா் கிராமத்தில், கடந்த மாதம் ஏற்பட்ட மின்விபத்தில் வேலாயுதம் என்பவா் உயிரிழந்தாா். உயிரிழந்த வேலாயுதத்தின் மனைவி ஜெயந்திக்கு தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மான கழகம் மூலம் வழங்கப்படும் இழப்பீட்டு தொகை ரூ.5 லட்சத்துக்கான காசோலையை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் இரா.லலிதா வழங்கினாா்.

அப்போது, சட்டப்பேரவை உறுப்பினா்கள் வீ. ராதாகிருஷ்ணன் (மயிலாடுதுறை), எஸ். பவுன்ராஜ் (பூம்புகாா்), பி.வி. பாரதி (சீா்காழி), மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளா் வை. முத்துக்குமரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.