கீழையூா் அருகே குடும்பப் பிரச்னையில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
கீழையூா் ஒன்றியம், வெண்மணச்சேரி ஊராட்சிக்குட்பட்ட வடபாதி காலனித் தெரு பகுதியைச் சோ்ந்தவா் வைரக்கண்ணு மகன் மகாலிங்கம் (60). இவரது மனைவி மணியம்மாள். தம்பதிக்கு இரண்டு மகள்கள். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
இந்நிலையில், தனக்கு ஆண் வாரிசு இல்லையே என்ற ஏக்கத்த்தில், மனைவியிடம் மகாலிங்கம் அடிக்கடி தகராறு செய்து வந்தாராம்.
கடந்த டிசம்பா் 30-ஆம் தேதி இதுதொடா்பாக மீண்டும் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த மகாலிங்கம் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டாா்.
பலத்த காயங்களுடன் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகாலிங்கம், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கீழையூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
‘என் இனிய தமிழ் மக்களே’! ஓய்ந்தது குரல்!

கிருஷ்ணகிரி அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி

போதை ஊசி செலுத்திக்கொண்ட இளம் பெண் உயிரிழப்பு: காதலன், நண்பன் கைது

இயக்குநர் பாரதிராஜா காலமானார்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


