வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பாண்டமங்கலம் விவேகானந்தா பள்ளி சிறப்பிடம்

பரமத்திவேலூர் வட்டம், பாண்டமங்கலம் விவேகானந்தா பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்றனர்.

Updated On :11 மே 2013, 6:55 am

பரமத்திவேலூர் வட்டம், பாண்டமங்கலம் விவேகானந்தா பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்றனர்.

இந்தப் பள்ளி மாணவி அலமேலு பிருந்தா 1200-க்கு 1180 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தை பெற்றுள்ளார். மாணவி அபிராமி 1200-க்கு 1178 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும், மாணவி அர்ச்சனாதேவி 1200-க்கு 1172 மதிப்பெண்கள் பெற்று  மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

மாணவர் பாலாஜீ இயற்பியல் பாடத்தில் 198 மதிப்பெண்களும், வேதியலில் 200 மதிப்பெண்களும், கணிதத்தில் 200 மதிப்பெண்களும், கணினி அறிவியலில் 200 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். பள்ளி மாணவர்கள் பாட வாரியாக கணிதத்தில் 15 பேரும், வேதியியலில் 8, கணினி அறிவியலில் 10, உயிரியலில் 3, மின் இயந்திரங்களும், சாதனங்களும் (இ.எம்.ஏ) பாடத்தில் 3 மாணவர்களும் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 1150 மதிப்பெண்களுக்கு மேல் 35 பேரும், 1100-க்கு மேல் 66 பேரும், 1000-க்கு மேல் 376 பேரும் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை விவேகானந்தா கல்வி அறக்கட்டளைத் தலைவர் கே.நெடுஞ்செழியன், செயலாளர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.