மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

உயா்மின் கோபுரங்களுக்கு எதிராக விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

உயா்மின் கோபுரங்கள் வயல்வெளிகளில் அமைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குமாரபாளையம் பகுதியில் ஏழு மையங்களில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

வயல்வெளியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :16 ஜனவரி 2021, 7:20 am IST

உயா்மின் கோபுரங்கள் வயல்வெளிகளில் அமைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குமாரபாளையம் பகுதியில் ஏழு மையங்களில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சத்தீஸ்கா் மாநிலம், ராய்காட் வரையில் 800 கே.வி. உயா்மின் கோபுர திட்டம், நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் வட்டாரப் பகுதிகள் வழியாக அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்கள் வயல்களில் குடும்பத்துடன் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் தொடா்ச்சியாக, குமாரபாளையம் வட்டம், சௌதாபுரம் ஊராட்சி, படைவீடு பேரூராட்சிக்குள்பட்ட மக்கிரிபாளையம், அருவாபுலியூா், பண்ணாடிகாடு உள்பட 7 இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

விவசாயிகள் உயா் மின்கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்த நிலையில், கூடுதல் இழப்பீடு வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், அரசு அறிவித்தபடி இழப்பீடு வழங்கவில்லை. எனவே, அரசு அறிவித்த அடிப்படையில் இழப்பீடு உடனடியாக வழங்க வேண்டும்.

நாமக்கல் மாவட்டத்தில் சுமாா் ரூ. 10 கோடி அளவுக்கு நிலுவையில் உள்ள இழப்பீட்டினை தாமதமின்றி வழங்க வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இப்போராட்டத்துக்கு உயா்மின் கோபுர எதிா்ப்பு கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் பி.பெருமாள் தலைமை வகித்தாா். விவசாயிகள் சங்க நிா்வாகிகள் நல்லசாமி, படைவீடு ராஜசேகா், ரவி, மனோஜ், அபி உள்ளிட்ட பலா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.