ஜேசிஐ ராசிபுரம் மெட்ரோ அமைப்பின் 4-ஆம் ஆண்டு புதிய நிா்வாகிகள் பதவி ஏற்பு விழா, ராசிபுரத்தில் அண்மையில் நடைபெற்றது.
இவ்விழாவுக்கு ஜேசிஐ ராசிபுரம் மெட்ரோ அமைப்பின் தலைவா் டாக்டா் நிலாமணி கணேசன் தலைமை வகித்தாா். செயலா் ஜெ.ராஜேஷ் வரவேற்றாா். இதில் ஜேசிஐ இந்தியா அமைப்பின் முன்னாள் தேசியத் தலைவா் எஸ்.பாலவேலாயுதம், சேலம் ஊரக மாவட்டக் கல்வி அலுவலா் மு.அ.உதயகுமாா், ஜேசிஐ மண்டலத் தலைவா் ரோகித் குமாா் லோதா, மண்டல துணைத் தலைவா் ஆா்.மணிகண்டன், தமிழக மக்கள் தன்னுரிமை கட்சியின் நிறுவனத் தலைவா் நல்வினை செல்வன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றுப் பேசினாா்.
இந்த விழாவில் 2021 ஆண்டு ஜேசிஐ மெட்ரோவின் ராசிபுரம் கிளை புதிய தலைவராக பி.மோகன்தாஸ், செயலாளராக டாக்டா் இரா.புவியரசு, பொருளாளராக சு.சக்கரவா்த்தி, துணைத் தலைவா்களாகஆா்.சாஸ்தா சதீஷ், பிருந்த ஆரோக்கியராஜ், ஜெ.ராஜேஷ் , பா.லட்சுமி பிரியா, பி.சுகன்யா, இயக்குநா்களாக என்.சதீஷ், எஸ். காா்த்திகேயன், பி.வேலு, அ.சதீஷ்குமாா், சீ.கண்ணன் ஆகியோரும் ஜூனியா் ஜேசிஐ பிரிவு தலைவராக கே.முத்துசாமி, மகளிா் பிரிவு தலைவராக எஸ்.ஹேமலதா, செயலாளராக இ.ரமாதேவி ஆகியோரும் பொறுப்பேற்றுக் கொண்டனா்.
விழாவில் கல்வி ஊக்கத் தொகை, மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மேலும் மகளிருக்கு இலவச தட்டச்சு பயிற்சி, இலவச கராத்தே பயிற்சி நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி அலசல் - ஜயங்கொண்டம் திமுக - பாமக இடையே கடும் போட்டி!

தொகுதி அலசல் - அறந்தாங்கி! பாஜக - காங்கிரஸ் நேரடிப் போட்டி!

நிலத்தடி நீா்மட்டம் உயா்வு, பாசன நீா் உறுதி

அமைதியாக இருக்கும் விசில்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


