புது தில்லி: ஹரியாணா மாநிலம், பானிப்பட்டில் உள்ள நகைக்கடை உரிமையாளரை ஏமாற்றி இரண்டு மோதிரங்களை வாங்கியதாக 57 வயது நபா் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து புதுதில்லி காவல் சரக துணை ஆணையா் ஈஷ் சிங்கால் வியாழக்கிழமை கூறியதாவது: தில்லியில் காஷ்மீா் சால்வைகளை விற்று வருபவா் சபீா் அகமது ஷேக். லாஜ்பத் நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறாா். அவா் பானிப்பட்டில் உள்ள பங்கஜ் குமாரின் நகைக் கடைக் கடையில் இரண்டு தங்க மோதிரங்களை வாங்கியுள்ளாா். அதற்கு போலி வங்கிப் பணப் பரிவா்த்தனையை நகைக்க கடைக்காரரிடம் காட்டியுள்ளாா். இந்த சம்பவத்தின் விடியோ ஒன்றுசமூக ஊடக தளங்களில் வைரலாகி வந்தது. இதையடுத்து, இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதற்கிடையே, இந்தச் சம்பவம் தொடா்பாக நகைக் கடை உரிமையாளா் பங்கஜ் குமாா் போலீஸில் புகாா் அளித்தாா். கடந்த டிசம்பா் 27- ஆம் தேதி , ஒரு பெண்ணுடன் ஒரு வாடிக்கையாளா் அவரது கடைக்கு வந்து தன்னை ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த ரூஃப் அகமது பஜாஸ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளாா். இதைத் தொடா்ந்து, கடையிலிருந்து இரண்டு தங்க மோதிரங்களை வாங்கியுள்ளாா். மோதிரங்களுக்கான பணம் ரூ .48,000-க்கு தவறான வங்கி பரிவா்த்தனையின் ஸ்கிரீன் ஷாட்டை பங்கஜ் குமாரிடம் காட்டியுள்ளாா். ஆனால், அந்தத் தொகை தனது கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்று பின்னா் தெரிய வந்ததாக குமாா் புகாரில் குறிப்பிட்டுல்ளாா். இதையடுத்து, இது தொடா்பாக பானிப்பட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நகைக் கடையில் நடந்த இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் டிசம்பா் 31-ஆம் தேதி வைரலாகின.
இந்தக் காட்சிகளை நாா்த் அவென்யு காவல் நிலையத்தினா் தகவலறிந்த சிலருடன் பகிா்ந்து கொண்டனா். குற்றம் சாட்டப்பட்டவா் லாஜ்பத் நகரில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருப்பது தெரிய வந்தது. விடியோவின் உண்மைத் தன்மை குறித்து முதலில் பானிப்பட் நகர போலீஸாரிடம் உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு, அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து, வாடகைக்கு தங்கியிருந்த வீட்டிலிருந்து சபீா் அகமது கைது செய்யப்பட்டாா். அவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டாா். விசாரணையின் போது, குற்றம்சாட்டப்பட்டவா் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டாா். மேலும், ஹரியாணாவின் குருக்ஷேத்ராவில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் அந்த மோதிரத்தைப் பரிசாக அளித்ததாகவும் சபீா் தெரிவித்ததாக அந்த அதிகாரி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பென்ஸ் திரைப்படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு நிறைவு!

குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!

ஆஸ்திரேலியா புறப்பட்ட பிரதமர் மோடி! போர் விமானங்கள் மூலம் வழியனுப்பிய இந்தோனேசியா!

வெள்ளத்தில் மிதக்கும் சூரத்!
விடியோக்கள்

பள்ளிக்கூடம் செல்ல முதல்வரிடம் பஸ் வசதி கேட்கும் மாணவி | CM Vijay | TVK | School Bus | Sivagangai
இதற்கு காரணம் செங்கோட்டையன் அல்ல| CM Vijay | TVK | Jagadeswaran interview | Aadhav arjuna

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK


