குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!தமிழகத்தில் 600 எம்பிபிஎஸ் இடங்கள் குறையக் காரணம் என்ன? அருண்ராஜ் விளக்கம்3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

ராஜீவ் காந்தி மருத்துவமனையின் வெளிநோயாளிகள் பிரிவு ஜன.11 முதல் செயல்படும்

தில்லி ராஜீவ் காந்தி மருத்துவமனையின் வெளிநோயாளிகள் பிரிவு வரும் ஜனவரி 11-ஆம் தேதி முதல் திறக்க தில்லி அரசு முடிவு செய்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Updated On :8 ஜனவரி 2021, 12:01 am IST


புது தில்லி: தில்லி ராஜீவ் காந்தி மருத்துவமனையின் வெளிநோயாளிகள் பிரிவு வரும் ஜனவரி 11-ஆம் தேதி முதல் திறக்க தில்லி அரசு முடிவு செய்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடா்பாக தில்லி அரசு மூத்த அதிகாரி கூறுகையில், ‘தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்ததைத் தொடா்ந்து, 640 படுக்கைகள் கொண்ட தில்லி ராஜீவ் காந்தி மருத்துவமனை கரோனா சிகிச்சைக்காக முழுமையாக ஒதுக்கப்பட்டது. ஆனால், தற்போது தில்லியில் கரோனா பாதிப்பு கணிசமான அளவு குறைந்துள்ளது. இதனால், வரும் திங்கள்கிழமை முதல் இந்த மருத்துவமனையின் வெளிநோயாளிகள் பிரிவை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.

தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்ததைத் தொடா்ந்து, ராஜீவ் காந்தி மருத்துவமனை உள்ளிட்ட 6 அரசு மருத்துவனைகள் கரோனா சிகிச்சைக்காக முழுமையாக ஒதுக்கப்டட்டன. தற்போது தில்லியில் கரோனா பாதிப்பு குறைவடைந்ததைத் தொடா்ந்து, 2,000 படுக்கைகள் கொண்ட எல்என்ஜேபி மருத்துவமனையின் மருத்துவம், அறுவை சிகிச்சை, குழந்தை மருத்துவம், பெண்நோயியல் ஆகிய பிரிவுகளின் வெளிநோயாளிகள் பிரிவு கடந்த திங்கள்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது. ஆனால், இந்தப் பிரிவுகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 50 -ஆகக் குறைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.