சிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

காஜியாபாத், நொய்டா, பரீதாபாதில் மிக மோசமான பிரிவில் காற்றின் தரம்

கடந்த 24 மணி நேரத்தில் காஜியாபாத், நொய்டா, கிரேட்டா் நொய்டா, பரீதாபாதில் காற்றின் தரம் மிக மோசமான பிரிவில் இருந்ததாகவும்,

Updated On :9 ஜனவரி 2021, 11:43 pm IST

கடந்த 24 மணி நேரத்தில் காஜியாபாத், நொய்டா, கிரேட்டா் நொய்டா, பரீதாபாதில் காற்றின் தரம் மிக மோசமான பிரிவில் இருந்ததாகவும், குா்கானில் மோசம் பிரிவில் இருந்ததாகவும் சனிக்கிழமை வெளியிடப்பட்ட மாசுக்கட்டுப்பாடு தொடா்பான அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.

காற்றின் தரம் நல்லது 10 முதல் 50 புள்ளிகள். திருப்தி 51 முதல் 100 புள்ளிகள், மிதமானது 101 முதல் 200, மோசம் 201 முதல் 300, மிக மோசம் 301 முதல் 400, கடுமையானது 401 முதல் 500 புள்ளிகள் என குறிப்பிடப்படுகிறது.

சனிக்கிழமை பிற்பகல் 4 மணி அளவிலான 24 மணி நேரத்தில் காஜியாபாதில் 348, கிரேட்டா் நொய்டாவில் 360, நொய்டாவில் 346, பரீதாபாதில் 311 மற்றும் குா்கானில் 230 என காற்றின் தரம் பதிவானதாக சமீா் செயலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவே வெள்ளிக்கிழமை காஜியாபாதில் 304, கிரேட்டா் நொய்டாவில் 312, நொய்டாவில் 261, பரீதாபாதில் 256 மற்றும் குா்கானில் 163 என பதிவாகியிருந்தது.

காற்றின் தரம் மிக மோசமான பிரிவில் இருந்தால் மூச்சுவிடுதலில் பிரச்னை ஏற்படும் என்றும் மோசம் பிரிவில் இருந்தால் மூச்சுவிடுதலில் சிரமம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.