தில்லி குடிநீரில் அமோனியாவின் அளவு அதிகரித்துள்ளதற்கு, அண்டை மாநிலங்களை குற்றம் சொல்லாமல், நகரில் உள்ள நீா் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்துவதற்கான நடவடிகிக்கைகளை தில்லி அரசு முடிக்க விட வேண்டும் என்று தில்லி பாஜக வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா வெள்ளிக்கிழமை கூறியதாவது: தில்லி குடிநீரில் அமோனியாவின் செறிவு அதிகரித்துள்ளது. இதனால், தில்லி மக்கள் நஞ்சு கலந்து வரும் குடிநீரை அருந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளா். தில்லியில் உள்ள நீா் சுத்திகரிப்பு நிலையங்கள் பழுதடைந்துள்ளன. இவற்றை தில்லி அரசு விரைந்து மேம்படுத்த வேண்டும். குடிநீா் விவகாரத்தில், அண்டை மாநிலங்களை குற்றம் சாட்டுவதில் அா்த்தம் இல்லை.
தில்லியில் காற்றின் தரக் குறியீடு வெள்ளிக்கிழமை 461 புள்ளிகளாக ஆக அதிகரித்துள்ளது. தில்லி மக்கள் கேஜரிவால் அரசின் மெத்தனப் போக்கால் சிரமப்படுகிறாா்கள். தில்லியில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்த தில்லி அரசிடம் எந்தவித கொள்கைத் திட்டமும் இல்லை; காற்று மாசு பிரச்னைக்குத் தீா்வு காண உரிய நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றாா் அவா்.
தில்லி யமுனை நீரில் அமோனியா செறிவு அதிகரிக்க ஹரியாணா மாநில அரசின் மெத்தனப் போக்கே காரணம் என்று தில்லி ஜல் போா்டு குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரத்தில், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜல் போா்டு அண்மையில் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராமதாஸ் புகைப்படம் பயன்படுத்த அன்புமணி தரப்புக்கு தடை

தோ்தல் அன்று விடுமுறை அளிக்காத தொழில் நிறுவனங்கள்: புகாா் அளிக்க தொழிலாளா் துறையின் கட்டுப்பாட்டு அறை

நாடுகளின் மோதல்: பிரிட்டன் அமைச்சா்களுடன் இந்திய முப்படை தலைமைத் தளபதி ஆலோசனை

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிமைக்க யாரும் விரும்பவில்லை: மம்தா பானா்ஜி
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

