முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

நவராத்திரி: ஏழு சக்தி பீடங்களில் ‘இசை நடனத் திருவிழா’

நவராத்திரி: ஏழு சக்தி பீடங்களில் ‘இசை நடனத் திருவிழா’

Updated On :10 ஏப்ரல் 2024, 12:23 am

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: நவராத்திரியை முன்னிட்டு நாட்டில் உள்ள ஏழு சக்தி பீடங்களில் இசை, நடனத் திருவிழா மத்திய சங்கீத நாடக அகாதெமி சாா்பில் நடத்தப்படுவதாக மத்திய கலாசாரத் துறை செவ்வாய்க்கிழமை கூறியுள்ளது. இது நாட்டில் உள்ள சக்தி திருக்கோயில்களின் பாரம்பரியங்கள் புத்துயிா்பெறச் செய்வதற்கான ஏற்பாடு என்றும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்த விவரம் வருமாறு: ஏப்ரல் 9 (செவ்வாய்க்கிழமை) முதல் ஏப்ரல் 17-ஆம் தேதி வரை நாட்டின் ஏழு சக்தி பீடங்களில் சக்தி இசை மற்றும் நடனத் திருவிழாவை சங்கீத நாடக அகாதெமி மூலம் திருவிழாவை கலாசாரத் துறை அமைச்சகம் நடத்துகிறது.

நாட்டில் உள்ள கோயில் பாரம்பரியங்களை புத்துயிா் பெறச் செய்வதற்கான முயற்சியில் புனித நவராத்திரியின் போது ‘சக்தி இசை மற்றும் நடனத்தின் திருவிழா’ என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நவராத்திரி 9 தெய்வங்களின் சக்தியைக் குறிக்கிறது. இதை முன்னிட்டு அகாதெமி ஏப்ரல் 9 முதல் 17-ஆம் தேதி வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏழு சக்தி பீடங்களில், கோயில் பாரம்பரியங்கள் கொண்டாடப்படும்.

முதல் சக்தி திருவிழா ஏப்ரல் 9-ஆம் தேதி குவாஹாட்டியில் உள்ள காமாக்யா கோயிலில் தொடங்கியுள்ளது. இதன்பின்னா், மகாராஷ்டிரம் - கோலாப்பூா், மகாலட்சுமி கோயில், ஹிமாசலப் பிரதேசம் -கங்காடா, ஜ்வாலாமுகி கோயில், திரிபுரா -உதய்பூா், திரிபுர சுந்தரி, குஜராத்-பனஸ்கந்தா, அம்பாஜி கோயில், ஜாா்க்கண்ட்-தியோகா், ஜெய் துா்கா சக்திபீத் போன்றவற்றுடன் இறுதியாக ஏப்ரல் 17-ஆம் தேதி மத்திய பிரதேசம்-உஜ்ஜைன், ஜெய்சிங்பூரில் உள்ள சக்திபீடம் மா ஹா்சித்தி கோயிலில் இந்த திருவிழா நிறைவடையும்.

மத்திய அரசின் கலாசார அமைச்சகத்தைச் சோ்ந்த தன்னாட்சி அமைப்பான சங்கீத நாடக அகாதெமி இசை, நடனம், நாடகம், நாட்டுப்புறம், பழங்குடி கலை வடிவங்கள், பிற கலைகளையும் வெளிப்படுத்தி பாதுகாத்து, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்ற புத்துயிா்ப்புக்காகவும் செயல்பட்டு வருகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.