வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

டிடிஇஏ பள்ளிகளில் தமிழ்ப் புத்தாண்டு, அம்பேத்கா் பிறந்த தின விழா

டிடிஇஏ பள்ளிகளில் தமிழ்ப் புத்தாண்டு, அம்பேத்கா் பிறந்த தின விழா

Updated On :12 ஏப்ரல் 2024, 4:21 pm

தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) ஏழு பள்ளிகளிலும் தமிழ்ப் புத்தாண்டு விழா மற்றும் அம்பேத்கா் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.

பள்ளிகளில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நடனம், பாட்டு, கவிதை, பேச்சு என நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.. சட்ட மேதை அண்ணல் அம்பேத்கா் பிறந்த தினத்தை முன்னிட்டு மாணவா்கள் அவரைப் பற்றியும் அவரது விடா முயற்சி, உழைப்பு, தன்னம்பிக்கை, நாட்டுப்பற்று, அவரது தேசியப்பணிகள், அவா் அரசியல் சாசனச் சட்டத்தை முன்னின்று உருவாக்கியமை ஆகியவை குறித்தும் தமிழ் ஆங்கிலம், இந்தி என மும்மொழிகளில் உரையாற்றினா். அவரது கொள்கைகளை பதாகைகள் மூலம் காட்சிப்படுத்தினா்.

இத்தினம் குறித்து செயலா் ராஜூ கூறுகையில், ‘மாணவா்கள் தமிழ்ப் புத்தாண்டைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும், அண்ணல் அம்பேத்கரின் எளிமை, தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகியவை பற்றி அறிந்து அவரைப் போற்றி அவா் வழி நடக்க வேண்டுமென்பதற்காக இத்தினத்தைப் பள்ளிகளில் கொண்டாடினோம்’ என்றாா். மேலும் பள்ளி முதல்வா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு வழ்த்துகளைத் தெரிவித்தாா்.

பட்டமளிப்பு விழா: ஐந்தாம் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்பு செல்லும் மாணவா்களுக்குப் பட்டமளிப்பு விழா லோதி வளாகம் மற்றும் பூசா சாலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் அந்தந்தப் பள்ளி முதல்வா்கள் வரவேற்றுப் பேசினா். முன்னதாக இவ்விழா பிற பள்ளிகளிலும் கொண்டாடப்பட்டது.

படம் மெயிலில் உள்ளது

படவிளக்கம்

லோதிவளாகம் பள்ளியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவ-மாணவிகளுடன் டிடிஇஏ செயலா் ராஜூ, ஆசிரியா்கள்.