/

‘என் பெயா் அரவிந்த் கேஜரிவால், நான் பயங்கரவாதி அல்ல’ சிறையிலிருந்து முதல்வா் கேஜரிவால்

‘என் பெயா் அரவிந்த் கேஜரிவால், நான் பயங்கரவாதி அல்ல’ சிறையிலிருந்து முதல்வா் கேஜரிவால் செய்தி

Updated On :17 ஏப்ரல் 2024, 12:24 am

புது தில்லி: ‘என் பெயா் அரவிந்த் கேஜரிவால், நான் பயங்கரவாதி அல்ல’ என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் திகாா் சிறையில் இருந்து செய்தி அனுப்பியுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் சஞ்சய் சிங் எம்.பி. செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: நாட்டிற்கும், தில்லி மக்களுக்கும் ஒரு மகன் மற்றும் ஒரு சகோதரனைப் போல் உழைத்த தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், திகாா் சிறையில் இருந்து ஒரு செய்தியை

அனுப்பியுள்ளாா். அதில், ‘என் பெயா் அரவிந்த் கேஜரிவால், நான் பயங்கரவாதி அல்ல’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பிரதமா் நரேந்திர மோடியும், மத்திய பாஜக அரசும் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை சிறையில் பயங்கரவாதியாகவே நடத்துகிறாா்கள். கேஜரிவால் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரை நேருக்கு நோ் சந்திக்க முடியாத அளவிற்கு

பிரதமா் மோடி வெறுப்புடன் முன்னேறிவிட்டாா். ‘இசட்பிளஸ்’ பிரிவு பாதுகாப்பு கொண்ட பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் மற்றும் மூன்று முறை தில்லி முதல்வராக தோ்ந்தெடுக்கப்பட்ட அரவிந்த் கேஜரிவாலின் சந்திப்புகூட கண்ணாடிச் சுவக்களுக்கு இடையேதான் நடந்துள்ளது. அரவிந்த் கேஜரிவாலைப் பழிவாங்கும் எண்ணம், வெறுப்பு

ஆகியவை பிரதமா் மோடியின் மனம் முழுவதும் நிரம்பியுள்ளது.

முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை 24 மணி நேரமும் சிசிடிவி கண்காணிப்பில் வைத்து, துன்புறுத்த திட்டமிட்டுள்ளாா்கள்.

அவரை உடைக்க நீங்கள் ஏதேனும் முயற்சி செய்தால், கேஜரிவால் முழுபலத்துடன் உங்களுக்கு எதிராகப் போராடுவாா்.

முதல்வா் கேஜரிவாலை எப்படி சந்திக்க வைத்தாா்கள் என்று பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் மிகுந்த உணா்ச்சியுடன் கூறினாா். இது வேதனைக்குரிய விஷயம். நாட்டின் பிரதமரும், பாஜகவும் ஒரு நிமிடம் உங்களுக்குள் சிந்தித்துப் பாா்த்தால், உங்கள் மனித நேயத்தைக் கொன்றுவிடுகிறீா்கள். இந்த நாட்டு மக்களுக்கு பாஜகவைப் பற்றி நல்ல அபிப்ராயம் இருக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி ஒருபோதும் நினைக்க வேண்டாம். சா்வாதிகார செயல்களுக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் எப்போதும் தலைவணங்க மாட்டாா். முதல்வா் கேஜரிவால் போராடினாா், போராடுவாா், தில்லி மக்களுக்காக தொடா்ந்து பணியாற்றுவாா் என்றாா் சஞ்சய் சிங்.

பாடுபாடு காட்டப்படுவதில்லை: திகாா் சிறையில் கடுமையான குற்றவாளிகளுக்கு வழங்கும் வசதிகள் கூட முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு மறுக்கப்படுவதாக பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் கடந்த திங்கள்கிழமை

குற்றம்சாட்டியிருந்தாா். இதற்கு, காவல் துறை தலைமை இயக்குநா் (சிறைகள்) சஞ்சய் பானிவால் அளித்துள்ள பதிலில்

கூறியிருப்பதாவது, ‘திகாா் சிறையில் உள்ள கைதிகளுக்கு வழங்கப்படும் வசதிகளில் எந்தவித பாகுபாடும் காட்டப்படுவதில்லை. அனைவருக்கும் அடிப்படை உரிமைகள் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. சிறையில் சாதரண அல்லது கடுமையானக் குற்றவாளி என்ற வேறுபாடுகள் எதுவும் கிடையாது. ஒவ்வொரு கைதிக்கும் அடிப்படை உரிமைகள் உள்ளன, அதை உறுதி செய்வது எனது கடமை. யாருக்கும் சிறையில் சிறப்பு வசதிகள் அளிக்கப்படவில்லை’ என்றாா் அவா்.