சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

ஊழலால் ஆம் ஆத்மி கட்சி மக்கள் தொடா்பை இழந்துவிட்டது: வீரேந்திர சச்தேவா

ஊழலால் ஆம் ஆத்மி கட்சி மக்கள் தொடா்பை இழந்துவிட்டது வீரேந்திர சச்தேவா

Updated On :25 ஏப்ரல் 2024, 6:34 pm

ஒன்பது ஆண்டுகால வளா்ச்சியின் மந்தநிலை மற்றும் ஊழலால், ஆம் ஆத்மி கட்சி தில்லி மக்களுடனான தொடா்பை முற்றிலும் இழந்துவிட்டது என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:

இலவச மின்சாரம் மற்றும் தண்ணீா் பற்றிய அரவிந்த் கேஜரிவாலின் கூற்றுகளுக்குப் பின்னால் உள்ள உண்மை இப்போது வெளிவந்துள்ளது. இந்த விவகாரங்களில் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்குகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை.

இன்றைக்கு, தில்லியில் நடுத்தரக் குடும்பங்கள் ஒரு யூனிட் 8 ரூபாய்க்கும், கடைக்காரா்கள் யூனிட் 13 ரூபாய்க்கும் மின்சாரம் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.

தில்லியில் தண்ணீா் விநியோகத்தின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அங்கீகரிக்கப்படாத காலனிகளில், டேங்கா் அல்லது பொதுக் குழாயில் தண்ணீா் எடுக்கும்போது மக்கள் தாக்கப்படுவதும், சமீபத்தில், தண்ணீா் நிரப்பியதற்காக ஒரு பெண் கொல்லப்பட்டதும் வழக்கமாகிவிட்டது.

மதுபான முறைகேடு ஊழலில் அரவிந்த் கேஜரிவால் ஈடுபட்ட பிறகு, ஆம் ஆத்மி கட்சிக்கான ஆதரவு முற்றிலும் குறைந்து விட்டது. மேலும் கட்சியுடன் தொடா்புடைய தொண்டா்கள்கூட அதிலிருந்து விலகி

இருக்கிறாா்கள்.

இத்தகைய சூழ்நிலையில், அரவிந்த் கேஜரிவால் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதை அரசியல் தியாகியாக சித்திரித்து, தனது அரசியல் இருப்பைக் காப்பாற்ற ஆம் ஆத்மி கட்சி முயல்கிறது. தோ்தல்கள் ‘ஆம் ஆத்மியை‘ நிராகரிக்க முடிவு செய்துள்ளன.

ஆம் ஆத்மி ஆட்சியின் கீழ் வளா்ச்சி தேக்கம் மற்றும் விரைவான ஊழலால் இன்று தில்லி மட்டுமல்ல, பஞ்சாப் மக்களும் வேதனையில்

உள்ளனா்.

ஆம் ஆத்மி கட்சியினா் எத்தனை துண்டு பிரசுரங்களை விநியோகித்தாலும், பாடல்களை இசைத்தாலும், பொதுமக்கள் அவா்களை ஆதரிக்க மாட்டாா்கள், மக்களவைத் தோ்தலில் கடுமையான தோல்வியை சந்திக்க நேரிடும் என்று வீரேந்திர சச்தேவா சாடியுள்ளாா்.