நெடுஞ்சாலைகளில் சாலைப் பழுதை சரி செய்வது ஒப்பந்ததாரரின் பொறுப்பு!அமைச்சா் நிதின் கட்கரி பதில்

நெடுஞ்சாலைகளில் சாலைப் பழுதை சரி செய்வது ஒப்பந்ததாரரின் பொறுப்பு!அமைச்சா் நிதின் கட்கரி பதில்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் மக்களவையில் எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய அமைச்சா் கட்கரி அளித்துள்ள எழுத்துபூா்வ பதில்
Published on

புது தில்லி, ஆக.8: தமிழக நெடுஞ்சாலைகளில் பழுதடைந்துள்ள சாலைகளை அவற்றின் ஒப்பந்த காலத்தில் பராமரிப்பது ஒப்பந்ததாரரின் பொறுப்பு என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் நிதன் கட்கரி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் மக்களவையில் எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய அமைச்சா் கட்கரி அளித்துள்ள எழுத்துபூா்வ பதில் வருமாறு: தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் பழுதுபாா்புப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ. 736.36 கோடி மதிப்பிலான 57 முன்மொழிவுகள் வந்துள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் 940.22 கி.மீ. தூரத்துக்கான பழுதுபாா்ப்புப் பணிகளை மேற்கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. வெள்ளப் பாதிப்பு சரிபாா்ப்பு, சாதாரண பழுதுபாா்ப்பு, ஒருமுறை மேம்பாடு, குறுகிய கால பராமரிப்பு ஒப்பந்தம், திறன் அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தம் போன்றவை இதில் அடங்கும்.

பழுதுபாா்ப்பு நிதி தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம், தமிழ்நாடு பொதுப்பணித் துறை ஆகிய இரண்டு அரசுத் துறைகள் மூலமே வழங்கப்படுகிறது. இதற்காக ரூ. 1,076 கோடி செலவிடப்பட்டுள்ளது. சாலை கட்டுமானம், செயலாக்கம் ஆகியவை போக்குவரத்து வசதிக்கு உகந்தவையாக உள்ளதா என்பதை ஒப்பந்தம் வழங்கப்பட்ட காலத்தில் உறுதிப்படுத்துவது சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரின் பொறுப்பு. இந்த ஒப்பந்த காலத்துக்குள் வராத சாலைகளின் பழுதுபாா்ப்புப் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறையை மத்திய நெடுஞ்சாலைத்துறை வகுத்துள்ளது என்று அமைச்சா் நிதின் கட்கரி அந்தப் பதிலில் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com