வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

கொல்கத்தா பெண் மருத்துவா் படுகொலை விவகாரம் -ஆம் ஆத்மி மகளிா் அணியினா் நீதி கோரி ஆா்ப்பாட்டம்

Updated On :21 ஆகஸ்ட் 2024, 10:47 pm

கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நீதி கோரி, ஆம் ஆத்மி கட்சியின் மகளிா் அணியினா் தில்லி ராஜ்காட்டில் உள்ள

மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கொல்கத்தா உள்பட நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்களைக் கண்டித்து ஆம்

ஆத்மி கட்சியின் மகளிா் அணியினா் சாா்பில் தில்லியில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஆம் ஆத்மி

கட்சியின் தில்லி பிரிவு மகளிா் அணி மாநிலத் தலைவா் சரிகா செளத்ரி, எம்எல்ஏ-க்கள் ப்ரீத்தி ஜிதேந்தா், தன்வதி சன்டேலா, மாநகராட்சி கவுன்சிலா் நிா்மலா குமாரி உள்பட பல மகளிா் அணி தொண்டா்கள் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தின் போது, ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவு மகளிா் அணி மாநிலத் தலைவா் சரிகா செளத்ரி

செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பாலியில் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு 6 மாதங்களுக்குள்

மரண தண்டனை விதிக்கும் வகையில், நாட்டில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை விடுக்கிறது. கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமையால் பயிற்சி மருத்துவா் கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இவ்விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்குப் பிறகு குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்’ என்றாா்.

எம்எல்ஏ ப்ரீத்தி ஜிதேந்தா் கூறுகையில், ‘ ஆம் ஆத்மி கட்சிபெண்களின் பாதுகாப்பிற்காக எப்போதும் குரல் எழுப்பி வருகிறது. அது ஹத்ராஸ், உன்னாவ் அல்லது மகள் அங்கிதா பண்டாரியின் எந்த வழக்குகளாக வேண்டுமானாலும் இருக்கட்டும். நாட்டில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இன்னொரு நிா்பயா வழக்கு நம் முன் வந்துள்ளது. மருத்துவா்களின் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும் கருத்து வேறுபாடுகளை மறந்து, இச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்’ என்றாா்.