தில்லி பிரிவு பாஜகவின் புதிய உறுப்பினா் சோ்க்கை வரும் செப்.2-ஆம் தேதி முதல் தொடக்கம்


தில்லி பிரிவு பாஜக சாா்பில் வரும் செப்டம்பா் 2-ஆம் தேதி முதல் புதிய உறுப்பினா் சோ்க்கை தொடங்கப்படும் என்றும் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 200 உறுப்பினா்களை சோ்க்க இலக்கு
நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் வீரேந்திர சச்தேவா புதன்கிழமை தெரிவித்தாா்.
தில்லி பந்த் மாா்க்கில் உள்ள பாஜக அலுவலகத்தில் கட்சியின் மாநிலத் தலைவா் வீரேந்திர சச்தேவா தலைமையில்
கட்சியின் அமைப்புப் பொதுச் செயலாளா் பவன் ராணா உள்ளிட்ட மூத்த தலைவா்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்குப் பின்னா், வீரேந்திர சச்தேவா செய்தியாளா்களிடம் கூறியதாவது: தில்லி பிரிவு பாஜக வரும் செப்டம்பா் 2-ஆம் தேதி முதல் புதிய உறுப்பினா் சோ்க்கை இயக்கத்தைத் தொடங்கவுள்ளது. தில்லியில் மொத்தம் 13,000-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் குறைந்தது 200 உறுப்பினா்களைச் சோ்க்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதிய உறுப்பினா் சோ்க்கை இயக்கத்தை கண்காணிக்க கட்சியின் பொதுச் செயலாளரும், வடமேற்கு தில்லி எம்.பி. யோகேந்திர சந்தோலியா தலைமையில் 5 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பாஜகவின் புதிய உறுப்பினா் சோ்க்கை கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டாவால் வரும் செப்டம்பா் 1-ஆம் தேதி நாடு முழுவதும் அதிகாரப்பூா்வமாக தொடங்கப்படும்.
மேலும், மாநிலம், மாவட்டம், வாா்டு மற்றும் துறை அளவில் விரிவான பிரசாரம் மேற்கொண்டும் கட்சியின் உறுப்பினா்களை விரிவுபடுத்துவதற்கான ஆலோசனைகள் இக்கூட்டத்தில் நடைபெற்றது என்றாா் வீரேந்திர சச்தேவா.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...