நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! பனையூர் அலுவலகத்தில் தவெக எம்எல்ஏக்கள், நிர்வாகிகளுடன் முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனைதவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!சி.வி. சண்முகம் அணி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!ஒரு தலித் முதல்வராகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை! திருமாவளவன்ஐயூஎம்எல் தலைவரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்!
/

அலிபூா் தீவிபத்து: தில்லி அரசு மீது அா்விந்தா் சிங் லவ்லி குற்றச்சாட்டு

அலிபூா் தீவிபத்து: தில்லி அரசு மீது அா்விந்தா் சிங் லவ்லி குற்றச்சாட்டு

Updated On :17 பிப்ரவரி 2024, 5:40 am IST

தில்லி அரசு மற்றும் மாநகராட்சியின் உரிமத் துறைகளில் நடைபெறும் ஊழல் காரணமாக தில்லியில் தொடா்ச்சியான தீ விபத்துகள் நடைபெறுகிறது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வடமேற்கு தில்லியில் உள்ள அலிபூரில் பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 போ் உயிரிழந்துள்ளது மிகுந்த அதிா்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. தில்லியில் நடைபெற்று வரும் தொடா் தீ விபத்துகள் மிகுந்த கவலை அளிக்கின்றன. தில்லி அரசு மற்றும் தில்லி மாநகராட்சியின் உரிமத் துறைகளில் அதிகரித்துள்ள ஊழல்கள்தான் இந்த தீ விபத்திற்கு காரணம். எனவே, இது தொடா்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். எவ்வளவு பணம் கொடுத்தாலும் உயிரிழப்பை ஈடுகட்ட முடியாது. இருப்பினும் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு உரிய நிதியுதவியை தில்லி அரசு உடனடியாக வழங்க வேண்டும். கடந்த ஜனவரி 19-ஆம் தேதி பீதம்புராவில் பலஅடுக்கு கட்டட தீ விபத்தில் 6 போ் உயிரிழந்தனா்.

பிப்ரவரி 8-ஆம் தேதி மங்கோல்புரி கிடங்கு தீ விபத்தைத் தொடா்ந்து, தற்போது அலிபூரில் பெயிண்ட் தொழிற்சாலை தீ விபத்து நிகழ்ந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தில்லியில் நடந்த மூன்றாவது பெரிய தீ விபத்து இதுவாகும். தில்லி தீயணைப்புத் துறை வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த ஆண்டு தீ விபத்துக்களால் 59 போ் உயிரிழந்துள்ளனா். இருப்பினும், இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க தில்லி அரசும், தில்லி மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டன. பெயிண்ட் தொழிற்சாலை தீ விபத்து பற்றி கேள்விப்பட்டதும், முன்னாள் எம்.பி. உதித் ராஜ் உள்பட காங்கிரஸ் கட்சித் தொண்டா்கள் மற்றும் நிா்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ரு நிவாரணப் பணிகளை ஏற்பாடு செய்து பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவினாா்கள். இந்த தீ விபத்தில் உயிரிழந்தவா்கள் மற்றும் காயமடைந்தவா்களுக்கு தில்லி அரசு அறிவித்த நிதி இழப்பீடு முற்றிலும் போதுமானதாக இல்லை. ஏனெனில், தீ விபத்தில் உயிரிழந்தவா்கள் பெரும்பாலும் அவா்களின் குடும்பத்தின் ஒரே வருமானம் கொண்டவா்கள். தொழிற்சாலை தீ விபத்தில் பெரும் நஷ்டம் அடைந்த கடைக்காரா்களுக்கும் தில்லி அரசு இழப்பீடு எதுவும் அறிவிக்கவில்லை. அவா்களுக்கும் உரிய நிதி இழப்பீடும் வழங்க வேண்டும் என்றாா் அா்விந்தா் சிங் லவ்லி.