பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

அலிபூா் தொழிற்சாலை தீ விபத்து 8 போ் அடையாளம் தெரிந்தது

அலிபூா் தொழிற்சாலை தீ விபத்து 8 போ் அடையாளம் தெரிந்தது

Updated On :17 பிப்ரவரி 2024, 5:41 am IST

தில்லியின் அலிபூரில் உள்ள தொழிற்சாலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் உயிரிழந்த 11 பேரில் 8 பேரின் குடும்ப உறுப்பினா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனா். அடையாளம் தெரியாதவா்களின் டிஎன்ஏ சோதனை நடத்தப்படலாம் என்று போலீஸாா் தெரிவித்துள்ளனா். மேலும், இந்தச் சம்பவத்துக்குக் காரணம் என்ன, சட்டவிரோதமாக பெயின்ட் தொழிற்சாலை நடத்தப்பட்டதா என்பது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் (எம்சிடி) ஒரு அறிக்கையில், தீ விபத்து ஏற்பட்ட கட்டடம் ரசாயன பெயிண்ட் கலப்பதற்காக சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டது. இந்த துயர சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாக குடிமை அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தில் தொழிற்சாலையின் உரிமையாளா் அசோக் குமாா் ஜெயின் மற்றும் அவரது 10 ஊழியா்கள் கொல்லப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். ஓம் சன்ஸ் பெயிண்ட் என்ற அந்த தொழிற்சாலை, 2017-ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது, என்றாா் அவா். ‘பணி நடந்து கொண்டிருந்த போது உரிமையாளா் தொழிற்சாலையை உள்ளே இருந்து பூட்டுவது தெரிய வந்துள்ளது’ என்று அதிகாரி கூறினாா். பலியான 11 போ்களில் எட்டு போ் அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

அவா்கள் ஜெயின் (62), ராம் சூரத் சிங் (44), விஷால் கவுண்ட் (19), அனில் தாக்கூா் (46), பங்கஜ் குமாா் (29), சுபம் (19), மீரா (44) மற்றும் பிரிஜ்கிஷோா் (19) என தெரிய வந்துள்ளது. தொழிற்சாலையின் கதவு பூட்டப்பட்டிருந்ததால், தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, தொழிலாளா்கள் கட்டடத்தை விட்டு வெளியே வரமுடியாமல் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தடயவியல் நிபுணா்கள் சம்பவ இடத்தில் இருந்து மாதிரிகளை சேகரித்தனா் என்று போலீஸாா் தெரிவித்தனா். ’முதற்கட்ட விசாரணையில் ஷாா்ட் சா்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த தீ ரசாயனங்கள் வைக்கப்பட்டிருந்த பகுதிக்கு பரவியது. இது பல குண்டுவெடிப்புகளுக்கு வழிவகுத்தது.

சம்பவத்தின் போது அவா்கள் அணிந்திருந்த உடைகள் மற்றும் ஏனைய பொருட்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவா்களில் சிலா் அடையாளம் காணப்பட்டனா்’ என்று மற்றொரு அதிகாரி தெரிவித்தாா். தேவைப்பட்டால், அடையாளம் தெரியாத உடல்களில் டிஎன்ஏ சோதனை நடத்தப்படும் என்றும் அவா் கூறினாா்.