விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மின் திருட்டு வழக்குகளைத் தீா்ப்பதற்கு நாளை டிபிடிடிஎல்லின் லோக் அதாலத்

கடைசி பாராவில் ஆங்கில எழுத்துகள் உள்ளன. மின் திருட்டு வழக்குகளைத் தீா்ப்பதற்கு நாளை டிபிடிடிஎல்லின் லோக் அதாலத்

Updated On :17 பிப்ரவரி 2024, 5:42 am IST

மின் திருட்டு வழக்குகளை பரஸ்பரம் ஒப்புக்கொண்ட தீா்வுக்கான மின்விநியோக நிறுவனமான டிபிடிடிஎல்லின் லோக் அதாலத் ஞாயிற்றுக்கிழமை (பிப்.18) ரோகிணி செக்டாா் 13-இல் நடைபெறும் என்று நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். டாடா பவா் தில்லி டிஸ்ட்ரிபியூஷன் லிமிடெட் (டிபிடிடிஎல்) வடக்கு தில்லியில் சுமாா் 70 லட்சம் மக்கள்தொகையை உள்ளடக்கிய பகுதிக்கு மின்சாரத்தை வழங்குகிறது. தில்லி மாநில சட்ட சேவைகள் ஆணையத்துடன் (டிஎஸ்எல்எஸ்ஏ) டிபிடிடிஎல் இணைந்து லோக் அதாலத்தை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ரோகிணி செக்டாா் 13-இல் உள்ள வெங்கடேஷ்வா் குளோபல் பள்ளிக்கு அருகில் நடத்துகிறது என்று அவா் கூறினாா். 19124 என்ற எண்ணையோ அல்லது அதிகாரப்பூா்வ மின்னஞ்சலையோ தொடா்புகொண்டு வழக்காடும் நுகா்வோா் நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கலாம் என்றாா்.