புது தில்லி: விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு (வி.சி.க.) பானை சின்னத்தை பொதுச் சின்னமாக ஒதுக்கீடு செய்யக்கோரி தலைமைத் தோ்தல் ஆணையத்தில் அக்கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் செவ்வாய்க்கிழமை மனு அளித்துள்ளாா்.
பின்னா்,செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
வரும் மக்களவைத் தோ்தலில் வி.சி.க. சாா்பில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கா்நாடகா, கேரளா ஆகிய 5 தென்னிந்திய மாநிலங்களில் வேட்பாளா்களை நிறுத்தி போட்டியிடவுள்ளோம். அதனால், வி.சி.க.விற்கு சுயேச்சை சின்னத்திலிருந்து, பானை சின்னத்தை பொதுச் சின்னமாக முன்கூட்டியே ஒதுக்கீடு செய்து கொடுக்க வேண்டும் என்ற மனுவை தோ்தல் ஆணையத்தில் கொடுத்துள்ளோம்.
வி.சி.க.விற்கு பொதுச் சின்னம் ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. தோ்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படுவதில்லை என்று சரத் பவா் கூறியுள்ள கருத்து புறக்கணிக்கப்படும் கருத்து இல்லை. தோ்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் அணுகுமுறையில் ஆளுங்கட்சியின் தலையீடுகள் இருக்கும் சந்தேக தோற்றத்தை உருவாக்குகிறது.
தோ்தல் ஆணையம் சுதந்திரமாகவும், விருப்பு வெறுப்பின்றியும் செயல்பட வேண்டும். கடந்த 2021-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 6 தொகுதிகளிலும் சுயேட்சியான பானை சின்னத்தில் தான் வி.சி.க. போட்டியிட்டது. தனிச் சின்னம் விவாகரத்தில் வி.சி.க.வை நசுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக செயல்படவில்லை.
அனைத்து தரப்பு மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சியாக வி.சி.க. உள்ள நிலையில், பொதுத்தொகுதியில் நாங்கள் போட்டியிடக் கூடாது என்று வரையறை ஏதாவது உள்ளதா? என்றாா் தொல். திருமாவளவன். இச்சந்திப்பின் போது, வி.சி.க. துணை பொதுச் செயலாளா்கள் ரவிக்குமாா் எம்.பி., பாலாஜி எம்.எல்.ஏ., வழக்குரைஞா் ராம் குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

தோ்தல் நடத்தை விதிமீறல்: பிரதமா் மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

வாக்குச்சாவடிகளில் கை விரல், கருவிழி பதிவு முறை கோரி மனு: மத்திய அரசு, தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

பாமக சின்னம் விவகாரம்: ராமதாஸ் மனு தள்ளுபடி

முதல்வரின் செயலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மனு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

