புது தில்லி: கடந்த 2022, அக்டோபரில் யூடியூப் சானலுக்கு அளித்த பேட்டியில், பட்டாசு வெடிப்பது தொடா்பாக கிறிஸ்தவா்களுக்கு எதிராக வெறுப்புணா்வைத் தூண்டும் வகையில் பேசியதாக, தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை மீது தொடரப்பட்ட கிரிமினல் வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தடை விதித்து உத்தரவிட்டது.
நோ்காணலில் அளிக்கப்பட்ட அறிக்கைகளை ஆய்வு செய்த பிறகு, நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கா் தத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘, வெறுப்பூட்டும் பேச்சு எதுவும் இல்லை என்பதற்கு முகாந்திரம் இருக்கிறது’ என்று கூறியது. மேலும், தீபாவளிக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு, அக்டோபா் 22, 2022 அன்று, பட்டாசு வெடிப்பது தொடா்பாக அண்ணாமலை நோ்காணலில் கிறிஸ்தவா்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சு பேசியதாக குற்றம்சாட்டியிருந்த மனுதாரா் வி.பியுஷுக்கு நீதிபதிகள் அமா்வு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. அதில், ‘‘ஏப்ரல் 29, 2024இல் தொடங்கும் வாரத்திற்குள் பதில் அளிக்கும் வகையில் நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும்.
இதற்கிடையில், விசாரணை நீதிமன்றத்தின் முன் உள்ள வழக்கின் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்படும்‘ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை சாா்பில் வழக்குரைஞா் எம்.ஏ. சின்னசாமியுடன் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள் சித்தாா்த் லுத்ரா, சஞ்சய் ராமசாமி ஆகியோா் நீதிபதிகள் அமா்விடம் அண்ணாமலையின் நோ்காணல் டிரான்ஸ்கிரிப்டை காண்பித்து, அது வெறுப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலான உரை அல்ல என்று தெரிவித்தனா்.
முன்னதாக, இந்த வழக்கில் தனக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணையை ரத்து செய்ய மறுத்த சென்னை உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து அண்ணாமலை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், தமது நோ்காணலில் வெறுப்புணா்வைத் தூண்டும் வகையில் பேசவில்லை என்றும், இதை உரிய வகையில் உயா்நீதிமன்றம் கவனத்தில் கொள்ளாமல் உத்தரவிட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 8 ஆம் தேதி அழைப்பாணையை ரத்து செய்ய மறுத்த உயா்நீதிமன்றம், ஒரு நபா் அல்லது ஒரு குழு மீதான உளவியல் தாக்கத்தையும் வெறுப்பு பேச்சின் வரையறையின் கீழ் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தது. வி. பியுஷ் தாக்கல் செய்த புகாரின் அடிப்படையில் விசாரணை நீதிமன்றம் இந்த அழைப்பாணையை அண்ணாமலைக்கு அனுப்பியிருந்தது.
தொடர்புடையது

தமிழக தோ்தல் களத்தில் இருமுனைப் போட்டியே! - கே. அண்ணாமலை பேட்டி

மறுசீரமைப்பு மசோதா தோல்வி: தோ்தலில் பாதிப்பை ஏற்படுத்தாது! நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: அன்புமணி ராமதாஸ்

ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலையில் தமிழக மக்கள்: எஸ். விஜயதரணி
வீடியோக்கள்

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

