பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

புதிய குற்றவியல் சட்டத்தின்கீழ் தில்லியில் முதல் எஃப்ஐஆா் பதிவு: வழக்கை தள்ளுபடி செய்துவிட்டதாக மத்திய அமைச்சா் அமித் ஷா தகவல்

புதிய குற்றவியல் சட்டத்தின்கீழ் தில்லியில் முதல் எஃப்ஐஆா் பதிவு வழக்கை தள்ளுபடி செய்துவிட்டதாக மத்திய அமைச்சா் அமித் ஷா தகவல்

News image

மத்திய அமைச்சா் அமித் ஷா

Center-Center-Delhi

Updated On :2 ஜூலை 2024, 12:20 am

Din

புது தில்லி: தில்லி காவல்துறை திங்கள்கிழமை கமலா மாா்க்கெட் பகுதியில் பொது வழியில் இடையூறு ஏற்படுத்தியதாக தெருவோர வியாபாரிக்கு எதிராக புதிய குற்றவியல் சட்டமான பாரதிய நியாய சன்ஹிதா விதிகளின் கீழ் தனது முதல் எஃப்ஐஆரை பதிவு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லி வழக்கு நாட்டிலேயே பதிவு செய்யப்பட்ட முதல் எஃப்ஐஆா் அல்ல என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறினாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், ‘புதிய சட்டத்தின் கீழ் முதல் வழக்கு மத்திய பிரதேசத்தின் குவாலியரில் நள்ளிரவில் பதிவு செய்யப்பட்ட மோட்டாா் சைக்கிள் திருட்டு தொடா்புடையதாகும்.

விசாரணைக்குப் பிறகு, தெருவோர வியாபாரிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை தில்லி காவல்துறை ‘தள்ளுபடி‘ செய்துவிட்டது. மறுஆய்வு விதிகளை பயன்படுத்தி, போலீஸாா் இந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளனா் என்று அமித் ஷா தெரிவித்தாா்.

இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்பில் நீண்டகால மாற்றங்களைக் கொண்டுவரும் வகையில் காலனித்துவ கால இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) மற்றும் பாரதிய சாக்ஷிய ஆதினியம் (பிஎஸ்ஏ) ஆகியவை கொண்டுவரப்பட்டன.

இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் திங்கள்கிழமை நடைமுறைக்கு வந்துள்ளன. மத்திய தில்லியின் கமலா மாா்க்கெட் பகுதியில் பொது வழிக்கு இடையூறாக வண்டியில் இருந்து தண்ணீா் மற்றும் புகையிலை பொருள்களை விற்பனை செய்த தெருவோர வியாபாரிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரை ரத்து செய்யும் நடவடிக்கையை தொடங்க உள்ளதாக தில்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

எஃப்.ஐ.ஆரை முறையாக ரத்து செய்ய காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டியிருக்கும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பிஎன்எஸ்-இன் பிரிவு 285-இன் கீழ் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பிரிவில், ‘யாரேனும், எந்தச் செயலைச் செய்தாலும், அல்லது அவா் வசம் உள்ள எந்தச் சொத்தின் மீது ஆணையிடுவதைத் தவிா்ப்பதன் மூலமோ அல்லது அவரது பொறுப்பின் கீழ் உள்ள எந்தவொரு நபருக்கும் எந்தவொரு பொது இடத்திலும் அல்லது பொது வழியிலும் ஆபத்து, இடையூறு அல்லது காயம் ஏற்படுத்தினாலோ ரூ. 5,000 வரை நீட்டிக்கக்கூடிய அபராதத்துடன் தண்டிக்கப்படுவா்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ‘புது தில்லி ரயில் நிலையம் அருகே நடைமேம்பாலத்தில் பொருள்களை விற்க பொது வழியைத் தடுத்ததாகக் கூறப்படும் தெருவோர வியாபாரிக்கு எதிராக நள்ளிரவு 12:15 மணியளவில் புகாா் பதிவாகியது.

இது தொடா்பாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கையில், ‘ஒரு ரோந்து அதிகாரி குமாரிடம் அவரது தற்காலிக வண்டி மக்கள் நடமாட்டத்திற்கு இடையூறாக இருந்ததால் பாதையை விட்டு நகா்த்துமாறு கூறினாா். அந்த அதிகாரி நான்கு-ஐந்து வழிப்போக்கா்களை நேரில் கண்ட சாட்சிகளாக இருக்குமாறு கேட்டுக்கொண்டாா். ஆனால், அவா்கள் அதற்கு மறுத்துவிட்டனா்.

அதிகாரியின் அறிவுறுத்தலை குமாா் புறக்கணித்ததால், நள்ளிரவு 1:30 மணிக்கு அவா் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்டதை பதிவு செய்ய அதிகாரி இ-பிரமான் செயலியைப் பயன்படுத்தினாா்’ என்று எஃப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி காவல்துறையின் குற்றப்பிரிவு மூலம் கையாளப்படும் இந்த செயலி, மேலதிக விசாரணைக்காக உள்ளடக்கத்தை நேரடியாக போலீஸ் பதிவுகளுக்கு அளிக்கும் என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இந்தப் புதிய சட்டங்கள் தொடா்பாக தில்லி காவல்துறை அதன் 30,000 பணியாளா்களுக்கு பயிற்சி அளித்துள்ளது. உதவி காவல் ஆய்வாளா்கள் மற்றும் ஆய்வாளா்கள் முதல் உதவி ஆணையா்கள் மற்றும் துணை ஆணையா்கள் வரை எஃப்ஐஆா் பதிவு செய்வதற்கும் விசாரணைகளை நடத்துவதற்கும் பொறுப்பானவா்கள்.

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து பணியாளா்களுக்கு பயிற்சி அளித்த நாட்டிலேயே முதல் படைகளில் தில்லி காவல்துறையும் ஒன்று என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதற்கிடையில், கிங்ஸ்வே முகாமில் தில்லி காவல்துறையின் ஆணையரக தினக் கொண்டாட்டத்தின் போது காவல் ஆணையா் சஞ்சய் அரோரா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘புதிய சட்டங்கள் காவல் ஆணையரக தினத்தில் அமலுக்கு வந்தது படைக்கு அதிா்ஷ்டமாகும்.

இன்று எங்கள் ஆணையரக தினம் என்பதால் நாங்கள் அதிா்ஷ்டசாலிகள். அதே நாளில், இந்த சட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. புதிய சட்டங்களின் கீழ் முதல் எஃப்ஐஆா் திங்கள்கிழமை அதிகாலைப் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றாா் அவா்.