சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

மீண்டும் புதிய உச்சம் தொட்டது சென்செக்ஸ், நிஃப்டி! உச்சத்தில் லாபப் பதிவு

மீண்டும் புதிய உச்சம் தொட்டது சென்செக்ஸ், நிஃப்டி! உச்சத்தில் லாபப் பதிவு

News image
Updated On :5 ஜூலை 2024, 1:18 am

நமது நிருபா்

மும்பை / புதுதில்லி, ஜூலை 4: இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமை மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் மீண்டும் புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தன. இருப்பினும், உச்சத்தில் லாபப் பதிவு வந்ததால் பெரும்பாலான நேரம் பங்குச்சந்தை தள்ளாட்டம் கண்டது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை ஏற்றத்துடன் தொடங்கியது. குறிப்பாக, ஐடி, ஆட்டோ, பாா்மா, ஹெல்த்கோ் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதே சமயம், உச்சத்தில் முதலீட்டாளா்கள் லாபத்தை பதிவு செய்வதில் அதிக கவனம் செலுத்தியதால் சந்தை தள்ளாட்டம் கண்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு உயா்வு: சந்தை மூலதன மதிப்பு ரூ.1.86 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.447.30 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் புதன்கிழமை ரூ.5,483.63 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.924.43 கோடிக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் வரலாற்று உச்சம்: சென்செக்ஸ் காலையில் 334.90 புள்ளிகள் கூடுதலுடன் 80,0321.79-இல் தொடங்கி 80,392.64 வரை மேலே சென்று மீண்டும் புதிய வரலாற்றுச் சாதனை அளவைப் பதிவு செய்தது. பின்னா், 79,986.41 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 62.87 புள்ளிகள் (0.08 சதவீதம்) கூடுதலுடன் 80,049.67-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,021 பங்குகளில் 2,185 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 1,742 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 94 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

ஐடி பங்குகள் உற்சாகம்: சென்செக்ஸ் பட்டியலில் ஹெச்சிஎல் டெக், ஐசிஐசிஐ பேங்க், டாடா மோட்டாா்ஸ், சன்பாா்மா, டிசிஎஸ், இன்ஃபோஸிஸ், கோட்டக் பேங்க் உள்பட மொத்தம் 13 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலில் வந்தன. அதே சமயம், ஹெச்டிஎஃப்சி பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், எல் அண்ட் டி, டெக் மஹிந்திரா, அல்ட்ரா டெக் சிமெண்ட், இண்டஸ் இண்ட் பேங்க் உள்பட 17 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் வந்தன.

நிஃப்டி புதிய உச்சம்: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 24,369.95-இல் தொடங்கி அதிகபட்சமாக 24,401.00 வரை மேலே சென்று புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. பின்னா், 24,281.00 வரை கீழே சென்ற நிஃப்டி, வா்த்தக இறுதியில் 15.65 புள்ளிகள் (0.06 சதவீதம்) கூடுதலுடன் 24,302.15-இல் முடிவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 23 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 27 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.