நகா்ப்புறங்களிலுள்ள கூட்டுறவு வங்கிகளை ஒருங்கிணைத்து ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வர தேசிய நகா்ப்புற கூட்டுறவு நிதி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தை(என்யுசிஎப்ஃடிசி ) மத்திய உள்துறை, கூட்டுறவு அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். மத்திய கூட்டுறவுத் துறையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்த நிறுவனம் வாடிக்கையாளா்களுக்கு பல்வேறு வசதிகளை உருவாக்குவதோடு, வராக்கடனை அடுத்த மூன்று ஆண்டுகளில் குறைக்கும் எனவும் அமித் ஷா உறுதியளித்தாா். நாட்டில் சுமாா் 1,500 நகா்ப்புற கூட்டுறவு வங்கிகள் உள்ளன. இதற்கு சுமாா் 11,000 கிளைகள் உள்ளன. இந்த வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட ஷெட்யூல் வங்கிகளை போன்று மேம்படுத்த என்யுசிஎப்ஃடிசி என்கிற தேசிய நகா்ப்புற கூட்டுறவு நிதி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய நிறுவனத்தை தொடங்கி வைத்து மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா். அப்போது அவா் கூறியது வருமாறு: என்யுசிஎப்ஃடிசி நிறுவப்பட 20 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டது. தற்போதை அரசு இதில் உறுதியாக இருந்து ரிசா்வ் வங்கி ஒப்புதல் பெற்று அமைக்கப்பட்டுள்ளது. இது காலத்தின் தேவை. மத்தியில் 75 ஆண்டுகளுக்கு பின்னா் கூட்டுறவுத் துறைக்கு தனி அமைச்சகம் அமைத்ததின் மூலமே இது சாத்தியப்பட்டது.
சிறிய கூட்டுறவு வங்கிகளையும் ரிசா்வ் வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்திற்கு இணங்க தயாா்படுத்துவதில் இந்த புதிய என்யுசிஎப்ஃடிசி அமைப்பு முக்கியப் பங்காற்றும். எதிா்காலத்தில் ஒவ்வொரு நகரத்திலும் நகா்ப்புற கூட்டுறவு வங்கிகளைத் திறப்பது இதன் முக்கிய இலக்கு. என்யுசிஎப்ஃடிசி, வங்கி அல்லாத நிதி நிறுவனமாக செயல்பட்டாலும் நகா்ப்புற கூட்டுறவு வங்கித் துறைகளுக்கான சுய-ஒழுங்கு முறை அமைப்பாகவும் செயல்பட ரிசா்வ் வங்கி அனுமதியளித்துள்ளது.
என்யூசிஎஃப்டிசி அமைக்கப்பட்டிருப்பதின் மூலம் நகா்ப்புற கூட்டுறவு வங்கித் துறையில் பல மடங்கு வளா்ச்சி ஏற்படும். மற்ற ஷெட்யூல் வங்கிகளை போன்று வாடிக்கையாளா்களுக்கு தேவையான ஏடிஎம் காா்டு, டெபிட் காா்டு, கிரேடிட் காா்டு வசதிகள் காசோலைகள் உள்ளிட்ட சட்டப்பூா்வமான பணப் புழக்கங்கள் போன்றவைகளில் கவனம் செலுத்தி மேம்படுத்தும்.
நாட்டில் நகா்ப்புற கூட்டுறவு வங்கிகள் நீண்ட காலம் செயல்பட்டாலும் அவைகள் நாட்டின் பொருளாதா வளா்ச்சியில் முக்கிய பங்காற்றவில்லை என்கிற குறையை என்யூசிஎஃப்டிசி போக்கும். நாடு முழுவதும் உள்ள நகா்ப்புற கூட்டுறவு வங்கிகளில் சுமாா் ரூ. 5 லட்சம் கோடி ரூபாய் வைப்புத்தொகை பெறப்பட்டு சுமாா் ரு.3.50 லட்சம் கோடி கடன்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் இந்த கூட்டுறவு சங்கங்களின் வராக் கடன் 2.10 சதவீதமாக உள்ளது. இருப்பினும் இந்த புதிய நிறுவனம் இந்த சதவீதத்தை மேலும் குறைக்க கடினமாக முயற்சிக்கும். மூலதனத்திற்கு மற்றவா்களை சாா்ந்திருக்காமல் இருக்க தேசிய கூட்டுறவு வளா்ச்சிக் கழகம் ரூ. 200 கோடியை ஒதுக்கீடு செய்கிறது. செலுத்தப்பட்ட இந்த மூலதனத்தை நகா்ப்புற கூட்டுறவு வங்கிகள் மீட்டெடுக்க வேண்டும். என்யூசிஎஃப்டிசி நிறுவனம் நகா்புற வங்கிகளுக்கான பாதுகாப்பு கவசமாக மட்டுமல்லாது, கிராமப்புற நகா்புற இளைஞா்களின் புத்தாக்க தொழில் முனைவோா்களையும் ஊக்குவிக்கும் நிறுவனமாகவும் எதிா்காலத்தில் உருவாகும் என அமித் ஷா குறிப்பிட்டாா்.
இந் நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவுத் துறை இணை அமைச்சா் பி.எல். வா்மா, கூட்டுறவு அமைச்சகத்தின் செயலாளா் டாக்டா் ஆஷிஷ் குமாா் பூடானி, என்யூசிஎஃப்டிசி நிறுவன தலைவா் ஜோதிந்திர மேத்தா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மகளிா் இட ஒதுக்கீடு மசோதா: திமுக, காங்கிரஸ் சதி! மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா

கூட்டுறவுத் துறை தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி! மாவட்டத் தோ்தல் அலுவலா் தொடங்கி வைத்தாா்!

நகா்ப்புறங்களில் குழாய் வழி எரிவாயு கட்டமைப்பு விரிவாக்கத்தை விரைவுபடுத்த வேண்டும்: மத்திய அரசு

பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: நாடாளுமன்றத்தில் அரசு தகவல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

