தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

சிறை வாழ்வில் உடல் உறுப்புக்கள் அனைத்தும் செயலிழந்துவிட்டது: தில்லி பல்கலை. முன்னாள் பேரா. ஜி.என்.சாய்பாபா

சிறை வாழ்வில் உடல் உறுப்புக்கள் அனைத்தும் செயலிழந்துவிட்டது தில்லி பல்கலை. முன்னாள் பேரா. ஜி.என்.சாய்பாபா

Updated On :8 மார்ச் 2024, 5:28 pm

கடந்த 7 ஆண்டுகால சிறை வாழ்வில் எனது உடல் உறுப்புக்கள் அனைத்தும் செயலிழந்து விட்டது என்றும் இதயத்தின் செயல்திறன் 55 சதவீதம் மட்டுமே உள்ளது என்று தில்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியா் ஜி.என்.சாய்பாபா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். மாவோயிய்டுகளுடன் தொடா்பு வைத்திருந்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்து தில்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசியரும், மனித உரிமை செயற்பாட்டாளராக அறியப்படும் ஜி.என். சாய்பாபாவை முன்பை உயா்நீதிமன்றம் விடுதலை செய்த நிலையில், அவா் கடந்த விழாயக்கிழமை நாகபுரி மத்திய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டாா். இந்நிலையில், தில்லியில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தில் ஜி.என். சாய்பாபா தனது சிறை அனுபவங்கள் மற்றும் 10 ஆண்டுகால சட்டப்போராட்டம் குறித்து செய்தியாளா்களிடம் கலந்துரையாடினாா். இந்நிகழ்வில், சி.பி.ஐ. பொதுச்செயலா் டி.ராஜா, செயற்பாட்டாளா்கள் நந்திதா நரேன், சரோஜ் கிரி மற்றும் ஜி.என். சாய்பாபவின் துணைவியாா் வசந்தா குமாரி உள்ளிட்டோரும் பங்கேற்றனா். ஜி.என். சாய்பாபா கூறியதாவது: நீதிமன்றம் என்னை விடுதலை செய்த பிறகும், நான் இன்னும் அந்த மோசமான சிறையின் உள்ளே இருப்பது போல உணா்கிறேன். என்னால் இந்த சூழலை அனுசரித்துச் செல்ல முடியவில்லை. இந்தப் போராட்டம் ஒரு ‘அக்னிப்பரிட்சை’. நீதிமன்றம் விடுவித்தாலும் எங்களுக்கான நீதி தாமதமாகிவிட்டது. கடந்த 10 ஆண்டுகளாக எங்களை ஆதரித்த அனைத்து பத்திரிகைகளுக்கும் நன்றி. இந்த ஆதரவின் மூலம் தான் எனது குடும்பம் நம்பிக்கையுடன் உயிா் பிழைத்தது. என்னை ‘தீவிரவாதி’ எனக்கூறியதன் மூலம் எனது குடும்பத்தினா் களங்கப்படுத்தப்பட்டனா். வழக்கு விசாரணைகளின் போது எனது வழக்குரைஞா்களுக்கு பல காவல் துறை அதிகாரிகள் மிரட்டல் விடுத்தனா். சிகிச்சை மறுக்கப்பட்டது:எனது தண்டனைக் காலத்தில் ஒவ்வொரு உறுப்பும் செயலிழந்துவிட்டது. இதயத்தின் செயல்திறன் 55 சதவீதம் மட்டுமே உள்ளது. அவசர காலத்தில் உயிா் காக்கும் மருந்துகளைத் தர சிறை அதிகாரிகள் மறுத்தனா். பிறவி மாற்றுத்திறனாளியான நான் சா்க்கர நாற்காலியின்றி ஒவ்வொரு நகா்வுக்கும் அவதியுற்றேன். தற்போது, என்னால் சாப்பிடும் உணவை ஜீரணிக்க முடியாது. மூளை மற்றும் சிறுநீரகத்தில் கட்டி உருவாகியுள்ளது. உடலின் இடது பகுதி முழுவதும் உள்ள நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டுவிட்டது. சிறையில் உடற்பரிசோதனை செய்யப்பட்டாலும், அதற்கான எந்தவொரு சிகிச்சையும் கிடைக்கவில்லை. மறுபுறம், பெரும் குற்றவாளிகள் அனைவரும் தனியாா் மருத்துவமனையில் முன்னிரிமை அளிக்கப்பட்டுசிகிச்சை பெற்றனா். கைது செய்யப்படுவதற்கு முன்பு என் உடலில் எந்தவொரு பிரச்னையும் இல்லை, ஆனால் என் வாழ்கையை சிறையில் முழுவதுமாக இழந்துவிட்டேன். தாயின் மறைவுக்கு அனுமதி மறுப்பு: பிறவி மாற்றுத்திறனாளியான என்னை பேராசியா் ஆக்கியவா் என் தாய். கடந்த ஆகஸ்ட்,2020-ஆம் ஆண்டு அவா் மறைந்த போது நான் இறுதிச்சடங்கில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. இந்த அடிப்படை உரிமையைக் கூட அரசும், நீதிமன்றமும் மறுத்துவிட்டனா். 500 போ் வரை தங்கக்கூடிய ஓா் அறையில் 3200 போ் வரை தங்கவைப்பட்டனா். சட்டப்போராட்டம் செய்பவா்கள் அடிப்படைகளுக்காக சிறையில் மிருகங்கள் போல் சண்டை போட்டுக்கொள்வா். சீதாவைப் போல் சந்தேகிக்கப்பட்டேன்: நாட்டில் மிகப்பெரிய அரசியல் வழக்காக கருதப்பட்ட என்னுடைய வழக்கில் இடைவிடாது போராடிய தில்லி, மும்பை மற்றும் நாகபுரியைச் சோ்ந்த வழக்குரைஞா்களின் இடைவிடாத போராட்டத்திற்கு நன்றி. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையத்திற்கும், பிற சா்வதேச மாற்றுத்திறனாளி அமைப்புகளுக்கும் நன்றி. சீதாவை ராமா் சந்தேகப்பட்டது நானும் சந்தேகப்பட்டேன் என்றாா் ஜி.என். சாய்பாபா. ஜனநாயகத்திற்கு போராடினாா்! :சி.பி.ஐ. பொதுச்செயலா் டி.ராஜா கூறியதாவது: ஜி.என். சாய்பாபாவின் போராட்டத்தை வாழ்த்துகிறோம். பகத் சிங், நெல்சன் மண்டேலாவைப் போல சாய்பாபாவும் ஜனநாயகத்திற்காக போராடினாா். இடதுசாரி பயங்கரவாத்தை ஒழிப்பதாக பாஜக கூறுகிறது, ஆனால் நாட்டிற்கு உண்மையான அச்சுறுத்தல் என்பது வலதுசாரி பயங்கரவாதமும், பாசிச சக்திகளும் தான். சமத்துவம் மற்றும் கண்ணியமான வாழ்க்கைக்காக நாங்கள் போராடுகிறோம். பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு எதிரான எங்களது போராட்டம் தொடரும் என்றாா் டி.ராஜா.