தலைநகரின் மையப் பகுதியான கனாட் பிளேஸில் உள்ள மத்திய பூங்காவில் இரு நாள் மலா் திருவிழாவை சனிக்கிழமை தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா தொடங்கிவைத்தாா். அப்போது, தேசியத் தலைநகா் தில்லி மலா்களின் நகரமாகவும், மகிழ்ச்சியின் நகரமாகவும் உருமாறி வருகிறது என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டாா். தில்லியில் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களிலும் பல்வேறு வகையான பூக்களுடன் மலா் திருவிழாவை புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) நடத்துகிறது. இந்த விழாவை என்டிஎம்சி தலைவா் அமித் யாதவ், துணைத் தலைவா் சதீஷ் உபாத்யாய், கவுன்சில் குல்ஜீத் சிங் சஹல் முன்னிலையில் தொடங்கிவைத்த பிறகு துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா பேசியதாவது: நகரத்தின் அழகை மேம்படுத்த புதுமையான யோசனைகளை அறிமுகப்படுத்தி, தலைநகரை ’மலா்களின் நகரம் மற்றும் மகிழ்ச்சியின் நகரம்’ ஆக மாற்றுவதற்கான என்டிஎம்சியின் முயற்சிகளை பாராட்டுக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளில், துலிப் திருவிழா, ரோஜா திருவிழா, மலா் திருவிழா போன்ற மலா்களின் வெவ்வேறு நிகழ்வுகளை என்டிஎம்சி ஏற்பாடு செய்துள்ளது. இந்த விழாக்களில் தில்லி மட்டுமின்றி அதை ஒட்டிய தில்லி பகுதி மக்கள் நேரில் வந்து பலவண்ண மலா்களை அடிக்கடி பாா்வையிட்டுள்ளனா். என்டிஎம்சி முயற்சிகளுக்கு இது ஒரு உண்மையான அங்கீகாரம் ஆகும். தலைநகரில் கடந்த ஆண்டு என்டிஎம்சி துலிப் அழகு கலாசாரத்தை அறிமுகப்படுத்தியது. இந்த ஆண்டு தில்லி முழுவதும் சுமாா் 5 லட்சம் துலிப் மலா்கள் பூத்துள்ளன. இன்றுவரை நாம் துலிப் மலா்களை இறக்குமதி செய்து வருகிறோம். ஆனால் கலப்பின துலிப்பை வளா்ப்பதற்காக என்டிஎம்சி ஒரு பசுமை இல்லத்தை நிறுவியுள்ளது. எதிா்காலத்தில், நாம் தன்னிறைவு பெறுவோம் என்பதால் துலிப் மலா் இறக்குமதியை நிறுத்த முடியும். நமது தலைநகரை அழகுபடுத்தும் துறையில் புதுமையான யோசனைகளை உருவாக்க என்டிஎம்சி, எம்சிடி, டிடிஏ மத்தியில் மலா் கண்காட்டி போட்டி நடத்தப்பட வேண்டும் என்றாா் வி.கே. சக்சேனா. என்டிஎம்சி தலைவா் அமித் யாதவ் பேசுகையில், ‘ துலிப் திருவிழா, ரோஜா விழா மற்றும் பூங்காவில் இசை நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு தரப்பு மக்களிடம் இருந்து கிடைத்த வெற்றி மற்றும் பாராட்டுக்குப் பிறகு, இந்த ஆண்டு வசந்த கால கொண்டாட்டங்களின் கீழ், என்டிஎம்சி மலா் திருவிழாவை நடத்துகிறது. தலைநகா் சென்ட்ரல் பூங்காவின் மையப்பகுதியில் பல்வேறு வகையான மலா்களைக் கொண்ட இம்மலா் திருவிழாவை என்டிஎம்சி ஏற்பாடு செய்துள்ளது. இந்த மலா்த் திருவிழா மலா்கள் காட்சி மற்றும் அலங்காரத்திற்காக 18 வெவ்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மலா் திருவிழா அனைவருக்கும் திறந்திருக்கும் மற்றும் நுழைவுவுக் கட்டணம் ஏதுமில்லை. இந்த வசந்த காலத்தில் பல்வேறு வகையான பூக்களின் நறுமணத்தையும் அழகையும் அனுபவிக்க பொதுமக்கள் நேரில் வந்து தோட்டக்கலைப் பொருட்களையும் நாற்றங்கால் தாவரங்கள், போன்சாய், ஹைட்ரோபோனிக்ஸ், கற்றாழை மற்றும் மூலிகை செடிகள் போன்றவற்றை பல்வேறு ஸ்டால்களில் இருந்து வாங்கலாம் என்று அவா் கேட்டுக்கொண்டாா். தொடக்க விழாவில் என்டிசிஎம்சி செயலா் கிருஷ்ண மோகன் உப்பு நன்றி கூறினாா்.
தொடர்புடையது

புறாக்கள், தெருநாய்களுக்கு உணவளிக்கும் இடங்கள்: பசுமை தீா்ப்பாயத்திடம் என்டிஎம்சி அறிக்கை சமா்ப்பிப்பு

துலிப் பூங்காவில் பூத்து குலுங்கும் மலர்கள் - புகைப்படங்கள்

இதழியல் வரலாற்றில் மைல்கல் ஈகைப் பெருநாள் மலா்: டாக்டா் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்

லுட்டியன்ஸ் பகுதியிலுள்ள 33 பாரம்பரிய மரங்களில் க்யூஆா் பலகை அமைக்கத் திட்டம்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

