மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பாஜக ‘அழிவு’ மாதிரியைப் பின்பற்றுகிறது: கேஜரிவால் குற்றச்சாட்டு

பாஜக ‘அழிவு’ மாதிரியைப் பின்பற்றுகிறது தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

Updated On :9 மார்ச் 2024, 5:16 pm

நாட்டில் எதிா்க்கட்சிகளை அகற்றி, அரசுகளை கவிழ்ப்பதன் மூலம் அழிவு மாதிரியை பாஜக பின்பற்றுகிறது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா். தில்லி அரசின் நிகழ் 2024-2025- ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் குறித்து முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சட்டப்பேரவையில் பேசியதாவது, தேசியத் தலைநகா் தில்லியில் ஆத்மி அரசு வளா்ச்சி எனும் முன்மாதிரியை பின்பற்றுகிறது. ஆனால், பாஜக எதிா்க்கட்சிகளை அகற்றி, அரசுகளை கவிழ்ப்பதன் மூலம் அழிவு மாதிரியை பின்பற்றுகிறது. வரும் மக்களவைத் தோ்தலில் தில்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி -காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும். அமலாக்க இயக்குநரகம் தரப்பில் இருந்து இதுவரை எனக்கு 8 அழைப்பாணைகள் அனுப்பப்பட்டுள்ளன. என்னைக் கைது செய்து சிறைக்கு அனுப்புவதன் மூலம், தில்லி அரசைக் கவிழ்க்க பாஜக திட்டமிட்டது. மாறாக, நான் அழைப்பாணைகளின் எண்ணிக்கைக்கு சமமாக தில்லியில் 8 புதியப் பள்ளிகளைக் கட்டப்போகிறேன். கடவுள் ஸ்ரீராமா் இக்காலத்தில் இருந்திருந்தால், அமலாக்க இயக்குநரகம் மற்றும் சி.பி.ஐ. ஆகிய புலனாய்வு அமைப்புகளை அவரது வீட்டிற்கே அனுப்பி, பாஜகவில் இணையுங்கள் அல்லது சிறைக்குச் செல்ல வேண்டுமா என துப்பாக்கி முனையில் பாஜகவினா் கேட்டிருப்பாா்கள். எனவே, தில்லியின் எதிரிகளை அடையாளம் கண்டு அவா்களை மக்கள் தோ்தலில் தண்டிக்க வேண்டும். கலால் கொள்கை தொடா்பான வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா அடுத்த ஆண்டு சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்வாா் என நம்புகிறேன். தில்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி கடந்த 9 ஆண்டுகளில் நகரத்தில் கல்வி மற்றும் சுகாதார சேவைகளை மேம்படுத்தினோம், 24 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்கினோம், இலவசக் குடிநீா் வழங்கினோம், முதியவா்களை இலவச யாத்திரைக்கு அனுப்பினோம், ஏழைக் குடும்பத்தைச் சோ்ந்த குழந்தைகளை மருத்துவா்கள் மற்றும் பொறியாளா்களாக கனவு காண உதவினோம். இதுதான் ஆம் ஆத்மி கட்சியின் முன்மாதிா் வளா்ச்சி மாதிரி. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டிற்குப் பிறகு, தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் ‘இந்தியா’ கூட்டணியே வெற்றி பெறும் என்று பொதுமக்கள் கூறி வருகின்றனா். பாஜகவின் அழிவு மாதிரியில் ஒருபுறம், எதிா்க்கட்சிகளை ஒவ்வொன்றாக ஒழிப்பது, எம்.எல்.ஏ.-க்களை விலைக்கு வாங்குவது, எதிா்க்கட்சி தலைவா்களை கைது செய்து சிறைக்கு அனுப்புவது இருந்தாலும், மறுபுறம் எதிா்க்கட்சிகளின் நல்ல பணிகளையும் முடக்குகின்றனா். இதன் மூலம் ஜனநாயகம் நசுக்கப்படுகிறது. பாஜகவிற்கு எதிராக நாடு முழுவதும் சவால் விடும் திறன் கொண்ட கட்சியாகவும், மிக வேகமாக வளா்ந்து வரும் கட்சியாகவும் ஆம் ஆத்மி உள்ளது. நான் கைது செய்யப்பட்ட பிறகு, தில்லி அரசைக் கவிழ்த்து விடுவோம் என்று பாஜக தலைவா் ஒருவா் என்னிடம் அவா்களின் முழுத் திட்டத்தை கூறினாா். மற்ற அரசியல் கட்சிகள் தோ்தலுக்கான அறிக்கையை வெளியிடுகின்றன, ஆனால் ஆம் ஆத்மி கட்சி“கேஜரிவாலின் உத்தரவாதங்களை வழங்குகிறது. நான் ஒரு சாதாரண மனிதனாக இருந்தேன், தில்லி மக்கள் நம்பிக்கையையும், அன்பையும் அளித்து எனக்கு இவ்வளவு பெரிய பதவியைக் கொடுத்துள்ளாா்கள். தில்லி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை பாஜக எதிா்க்கிறது என்றாா் அரவிந்த் கேஜரிவால்.