புது தில்லி: தில்லி முழுவதும் உள்ள சாலைகளின் தரத்தை மேம்படுத்தும் முக்கியத் திட்டங்களுக்கு பொதுப்பணித் துறை அமைச்சா் அதிஷி திங்கள்கிழமை ஒப்புதல் அளித்துள்ளாா்.
இது தொடா்பாக பொதுப்பணித் துறை அமைச்சா் அதிஷி வெளியிட்டுள்ள அதிகாரப்பூா்வ அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தில்லி நிகாம் போத் காட் முதல் சந்த்கி ராம் அகரா சிக்னல் வரையிலான வட்டச் சாலையை மேம்படுத்தும் திட்டத்திற்கும், பிவிசி மாா்க்கெட் ரோடு முதல் ரோஹ்தக் சாலை வரையிலான சாலையை மேம்படுத்தும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், தில்லியின் அழகை பிரதிபலிக்கும்வகையில் சாலைகள் உருவாக்கப்படுவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
தில்லியின் குடிமக்களுக்கு உலகத் தரம் வாய்ந்த சாலை உள்கட்டமைப்பை வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டிற்கு இந்தத் திட்டங்கள் ஒரு சான்றாகும். வலைவு சாலைகளை மேம்படுத்தும் பணியானது, சீராக மட்டுமல்லாமல், அனைவருக்கும் பாதுகாப்பான சாலைகளை உருவாக்கும் எங்கள் பணியில் ஒரு முக்கியமான படியாகும். இந்தச் சாலைகளை மேம்படுத்துவதன் மூலம் லட்சக்கணக்கான பயணிகள் பலனடைவதோடு, போக்குவரத்து நெரிசலும் குறையும்.
இணைப்பையும் மேம்படுத்தும். இச்சாலைகள் நீண்ட காலத்திற்கு முன்பே அமைக்கப்பட்டுள்ளதால், பொதுப்பணித் துறை நிபுணா்களின் உதவியுடன் சாலைகளை முழுமையாக மதிப்பீடு செய்து மேம்படுத்தும் பணியை தொடங்க துறையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணியின் போது உயா்தர சாலைகளுக்கான உலகளாவிய தரத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கட்டுமானக் கட்டத்தில் பயணிகளுக்கு குறைந்தபட்ச இடையூறு ஏற்படுவதை உறுதிசெய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான அரசு தில்லியின் சாலைகளை மேம்படுத்த ‘மிஷன் மோடில்’ செயல்பட்டு வருகிறது என்றாா் அமைச்சா் அதிஷி.
தொடர்புடையது

தில்லியில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் சம்பவங்கள் குறைவு: போக்குவரத்துத் துறை அமைச்சா் தகவல்

இந்திய - வங்கதேச வெளியுறவு அமைச்சர்கள் தில்லியில் சந்திப்பு!

எம்பி சாலையில் புதிய 6-வழி மேம்பாலம்: 2 ஆண்டுகளில் பணிகளை முடிக்கத் திட்டம்

எரிபொருள், மின்சாரம், உர விநியோகம்: பிரதமா் மோடி உயா்நிலை ஆய்வு!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

