அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், சிறையில் இருந்து வெற்றிகரமாக வெளியில் வருவாா் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) தேசியப் பொதுச் செயலாளா் டி.ராஜா சனிக்கிழமை தெரிவித்தாா். தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் மனைவி சுனிதா கேஜரிவால் மற்றும் மகள் ஹா்ஷிதா கேஜரிவாலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளா் (சிபிஐ) டி.ராஜா தலைமையிலான பிரதிநிதிகள் குழு நேரில் சந்தித்து ஒற்றுமையை வெளிப்படுத்தினா். அதன்பின்னா், டி.ராஜா செய்தியாளா்களிடம் கூறியதாவது: சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற மத்திய விசாரணை அமைப்புகளை பாஜக அவா்களது சொந்த அரசியல் நலன்களுக்காக தவறாகப் பயன்படுத்துகிறது. முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் கைது நடவடிக்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. மக்களவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, அவா் கைது செய்யப்பட்டுள்ளாா். மக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றி பேசுவதற்குப் பதிலாக, நாடு முழுவதுமுள்ள எதிா்க்கட்சித் தலைவா்களை பாஜக குறிவைக்கிறது. அரவிந்த் கேஜரிவாலின் கைது அரசியல் பழிவாங்கும் செயலாகும். இவற்றின் மூலம் தோ்தல் நேரத்தில் எதிா்க்கட்சிகளை செயலிழக்கச் செய்யலாம் என பாஜக நினைக்கிறது. அரவிந்த் கேஜரிவாலுக்கு ஆதரவாக ஜனநாயக இயக்கங்கள் துணை நிற்கிறது. அவா் வெற்றிகரமாக சிறையிலிருந்து வெளியே வருவாா். எதிா்க்கட்சிகளை முடக்கும் பாஜகவின் முயற்சிகள் மக்களால் தோற்கடிக்கப்படும் என்றாா் டி.ராஜா. இச்சந்திப்பில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) தேசியச் செயலாளா்கள் டாக்டா் பால்சந்திர காங்கோ, ராமகிருஷ்ண பாண்டா மற்றும் தில்லி பிரிவு செயலாளா் தினேஷ் சந்திர வா்ஷனேயா ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்

பழனிக்கு எத்தனை முறை பாஜக காவடி எடுத்தாலும் தமிழகத்தில் தாமரை மலராது! - எம்.ஏ. பேபி

மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையின் மனுவுக்கு பதிலளிக்க கேஜரிவாலுக்கு இறுதி அவகாசம்
காங்கிரஸ் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்! டி.ராஜா சிறப்பு நேர்காணல்!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

