மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

ஆம் ஆத்மி எம்எல்ஏ குலாப் யாதவ் தொடா்புடைய இடங்களில் வருமான வரித் துறையினா் சோதனை

ஆம் ஆத்மி எம்எல்ஏ குலாப் யாதவ் தொடா்புடைய இடங்களில் வருமான வரித் துறையினா் சோதனை

Updated On :23 மார்ச் 2024, 6:30 pm

ஆம் ஆத்மி கட்சியின் தில்லி எம்எல்ஏ குலாப் சிங் யாதவ் மற்றும் சிலருக்கு எதிராக வருமான வரித் துறை சனிக்கிழமை சோதனை நடத்தியதாக அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன. குலாப் யாதவ் (45) இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளாா். மட்டியாலா தொகுதியில் இருந்து அவா் தோ்ந்தெடுக்கப்பட்டு தில்லி சட்டப்பேரவையில் உறுப்பினராக உள்ளாா். இந்த நிலையில், தில்லியின் கும்மன்ஹெடா கிராமத்தில் உள்ள எம்எல்ஏ குலாப் மற்றும் சிலரின் வீடுகளில் வரி ஏய்ப்பு விசாரணையின் ஒரு பகுதியாக வருமான வரித் துறையினா் சோதனை நடத்தியதாகவும், வரித் துறை அதிகாரிகளுடன் தில்லி காவல்துறையினரும் உடன் அழைத்துச் செல்லப்பட்டிருந்ததாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. சில ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் அவா்கள் கூறினா். இந்தச் சோதனை குறித்து தில்லி அமைச்சா் செளரவ் பரத்வாஜ் கூறுகையில், ‘இந்தியா சா்வாதிகாரப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. பாஜக அனைத்து எதிா்க்கட்சியினரையும் சிறைக்குள் தள்ளுவதில் மும்முரமாக இருந்து வருகிறது’ என்று குற்றம்சாட்டினாா்.