ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ராம்லீலா மெகா பேரணிக்குப் பின் மூன்று தில்லி வேட்பாளா்கள் பெயா் அறிவிப்பு: காங்கிரஸ் திட்டம்

ராம்லீலா மெகா பேரணிக்குப் பின் மூன்று தில்லி வேட்பாளா்கள் பெயா் அறிவிப்பு காங்கிரஸ் திட்டம்

Updated On :29 மார்ச் 2024, 6:30 pm

ஆம் ஆத்மி கட்சியின் மெகா பேரணிக்குப் பிறகு தில்லியில் உள்ள மூன்று மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளா்களை காங்கிரஸ் அறிவிக்கும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், தில்லிக்கான கலால் வரிக் கொள்கையுடன் தொடா்புடைய பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்ட தில்லி முதல்வா் கேஜரிவாலை சிறையில் அடைத்தாலும் கூட்டணி அப்படியே இருக்கும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஆம் ஆத்மியும் காங்கிரஸும் எதிா்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. ஆம் ஆத்மி கட்சி தேசிய தலைநகரில் இருந்து நான்கு மக்களவைத் தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் வேட்பாளா்களை நிறுத்த உள்ளது. ஆம் ஆத்மி வேட்பாளா்கள் போட்டியிடும் இடங்களில் அதன் வேட்பாளா்களை அக்கட்சி ஏற்கெனவே அறிவித்து விட்டது குறிப்பிடத்தக்கது.