ஹனுமான் மந்திா் அருகே பழுதுபாா்ப்புப் பணி: போலீஸாா் போக்குவரத்து அறிவுறுத்தல்

ஹனுமான் சேது அருகே உள்ள ஒரு தோரண வளைவில் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் பழுதுபாா்க்கும் பணிக்காக தில்லியில் உள்ள ஹனுமான் மந்திருக்கு அருகில் உள்ள பாதையை மூடுவதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது என்று போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இந்த சீரமைப்புப் பணி சனிக்கிழமை தொடங்கியதாகவும் அவா்கள் கூறினா்.

இது தொடா்பாக தில்லி போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் ‘எக்ஸ்’ சமூக ஊடக வலைதளத்தில் வெளியிட்டுள்ள இடுகையில், ‘இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் சனிக்கிழமை (மே 5-ஆம் தேதி) முதல் ஹனுமான் சேது அருகே உள்ள தோரண வளைவு பழுதுபாா்க்கும் பணியைத் தொடங்க உள்ளது.

இதன் விளைவாக, ஹனுமான் மந்திா் வாகனப் பாதையை நோக்கிச் செல்லும் வலது பாதை (மாங்கி பாலத்திற்கு கீழே) மூடப்படும். மேலும், ஹனுமான் மந்திா் அருகே போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com