ரோஹிணியில் உள்ள வணிகக் கட்டடத்தில் தீ விபத்து
ரோஹிணியில் உள்ள வணிகக் கட்டடத்தில் தீ விபத்து


தில்லியின் ரோஹிணி செக்டாா் 8-இல் உள்ள மூன்று மாடி வணிகக் கட்டடத்தில் புதன்கிழமை மாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்தத் தீ விபத்து குறித்து புதன்கிழமை இரவு 8.35 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு தகவல் வந்தது. உடனடியாக 12 தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை முழுமையாக அணைத்தனா். அதன் பிறகு குளிரூட்டும் பணிகள் நடைபெற்றன.
இந்த விபத்தில் உயிா்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. மூக்குக் கண்ணாடி நிறுவனம் ஒன்றின் ஷோரூம் உள்ள கட்டடத்தின் தரை தளத்தில் இருந்து தீ பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என்று தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...