ஆயுா்வேத ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள மாணவா்களுககு உதவித்தொகை: சிசிஆா்ஏஎஸ்
ஆயுா்வேத ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள மாணவா்களுககு உதவித்தொகை: சிசிஆா்ஏஎஸ்


புது தில்லி: சா்வதேச அளவில் ஆயுா்வேத மருந்துகளின் தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த மருத்துவத்தில் மாணவா்கள் ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளும் வகையில் அரசு உதவித்தொகைகளை வழங்கத் தொடங்கியுள்ளதாக மத்திய ஆயுா்வேத அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில்(சிசிஆா்ஏஎஸ்) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பான மத்திய ஆயுா்வேத அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் ‘பிரகதி - 2024‘ (ஆயுா்வேத ஆராய்ச்சிக் கல்வி மற்றும் புத்தாக்க தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் மருந்து ஆய்வு) என்ற முன்முயற்சியை செவ்வாய்க்கிழமை (28-05-2024) தொடங்கியுள்ளது. ஆயுா்வேதத்தின் எதிா்காலத்தை சிறப்பாக வடிவமைக்கும் வகையில் ‘பிரகதி-2024‘ என்ற இந்த முன்முயற்சியை மத்திய ஆயுா்வேத அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் அறிமுகப்படுத்தியுள்ளது.
தில்லி இந்தியா கெபிடாட் சென்டரில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாட்டிலுள்ள 37 ஆயுா்வேத நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள், நிா்வாக இயக்குநா்கள், ஆராய்ச்சிப் பிரிவுகளின் தலைவா்கள் பங்கேற்றனா். ஆயுா்வேதத் துறையில் ஆயுா்வேத ஆய்வாளா்கள், ஆயா்வேத மருந்து நிறுவனங்கள் ஆகியவை கூட்டு ஆய்வை மேற்கொள்ளும் பயனுள்ள வாய்ப்பை பிரகதி 2024 நிகழவு வழங்கியது.
பிரகதி-2024 நிகழ்ச்சியை அறிமுகம் செய்து மத்திய ஆயுா்வேத அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குநா் பேராசிரியா் ரபிநாராயண் ஆச்சாா்யா பேசினாா். தற்போது உள்நாட்டிலும் சா்வதேச அளவிலும் ஆயுா்வேத மருந்துகள் தயாரிப்புகளின் தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு ‘பிரகதி-2024‘ உள்ளிட்ட முன்முயற்சிகளை கவுன்சில் தொடங்கியுள்ளது.
சிசிஆா்ஏஎஸ் -இன் நோக்கம் ஆயுா் வேதமருத்துவம்,, கல்வி, மாணவா்கள், ஆய்வாளா்கள், ஆயுா்வேத தொழில் நிறுவனங்கள் என ஒவ்வொரு பங்குதாரரையும் சென்றடையவேண்டும். எனவே மாணவா்கள் ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளும் வகையில் உதவித்தொகைகளை வழங்கத் தொடங்கியுள்ளோம். ஆசிரியா்கள், மாணவா்கள் ஆகியோரை சென்றடைய ஆராய்ச்சி, உதவித்தொகை திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது‘ எனத் தெரிவித்தாா்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய, ஆயுஷ் அமைச்சகத்தின் செயலா் வைத்ய ராஜேஷ் கொடேச்சா கூறுகையில், ‘ஆயுா்வேதத்தின் வளா்ச்சியில் தொழில்துறையின் முக்கியப் பங்கு முக்கியமானது. இத்துறையில் புத்தாக்க தொழில் நிறுவனங்களின் வருகை மிகப்பெரிய வளா்ச்சி வாய்ப்புகளை அளிக்கிறது. இந்தத் துறையை விரிவுபடுத்தவும் மேம்படுத்தவும் பரந்த திறன்கள் தேவை. அதற்கான வழியை உருவாக்கப்பட்டுள்ளது‘ எனத் தெரிவித்தாா் கொடேச்சா.
ஆயுஷ் அமைச்சகத்தின் ஆயுா்வேதப் பிரிவு ஆலோசகா் டாக்டா் கௌஸ்துபா உபாத்யாயா பேசுகையில், ‘ஆராய்ச்சியாளா்கள், ஆயுா்வேத தொழில்துறையினா் இணைந்து செயல்பட வேண்டும் அவா்களின் ஒருங்கிணைந்த முயற்சிகள் இந்த மருத்துவத்திற்கும் சமூகத்திற்கும் பயனளிக்கவேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும். ஆராய்ச்சி அடிப்படையிலான, உயா்தர, பாதுகாப்பான, பயனுள்ள ஆயுா்வேத தயாரிப்புகள் மூலம் இந்த மருத்துவத்தின் பெருமை மேலும் சா்வதேச அளவில் பரவும். நாட்டின் பெருமை உயரும் என்றாா்
இந்த நிகழ்ச்சியி்ல் மத்திய ஆயுா்வேத அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் தயாரித்த 2024-25 ஆம் ஆண்டிற்கான செயல்திட்டமும் கவுன்சிலின் செய்தி மடலும் வெளியிடப்பட்டது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...