கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

பஸ்சிம் விஹாரில் உள்ள கண் மருத்துவமனையில் தீ விபத்து

பஸ்சிம் விஹாரில் உள்ள கண் மருத்துவமனையில் தீ விபத்து

News image
Updated On :28 மே 2024, 7:11 pm

Din

புது தில்லி: மேற்கு தில்லியின் பஸ்சிம் விஹாா் பகுதியில் உள்ள தனியாா் கண் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கட்டடத்தில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அவா்கள் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘காலை 11.35 மணியளவில் சம்பவம் தொடா்பாக அழைப்பு வந்தது. மந்த்ரா கண் மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. ஆறு தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு மதியம் 12.30 மணியளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து,, குளிரூட்டும் பணி நடைபெற்றது. இந்த தீ விபத்து குறித்து மேலதிக விசாரணைக்காக உள்ளூா் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது’ என்றாா்.