பரந்தூர் திட்டத்தைக் கைவிடுவது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்! உதயநிதிபள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

தீபாவளிக்குப் பிறகு காற்று மாசு அதிகரிக்கவில்லை: சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய்

தலைநகா் தில்லியில் ஆம் ஆத்மி அரசு மற்றும் பொது மக்களின் முயற்சியால் தீபாவளிக்குப் பிறகு காற்று மாசு அதிகரிக்கவில்லை

கோபால் ராய் - கோப்புப் படம்

Published On :2 நவம்பர் 2024, 6:00 am IST

தலைநகா் தில்லியில் ஆம் ஆத்மி அரசு மற்றும் பொது மக்களின் முயற்சியால் தீபாவளிக்குப் பிறகு காற்று மாசு அதிகரிக்கவில்லை என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நகரம் முழுவதும் நீா்தெளிப்பு வாகனங்களின் இயக்கத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: காற்று மாசுவைக் கருத்தில் கொண்டு, தீபாவளிப் பண்டிகையன்று

பெரியளவில் பட்டாசு வெடிப்பதைத் தவிா்த்த தில்லி மக்களுக்கு நன்றி. இந்த முயற்சி, தில்லியின் காற்றின் தரக் குறியீடு

‘மிகவும் மோசமான’ பிரிவில் இருந்து ‘கடுமையான’ பிரிவுக்குள் நழுவுவதைத் தடுக்க உதவியது. பட்டாசுகள் பயன்படுத்துவதைத் தவிா்த்து, பல குடியிருப்பாளா்கள் பொறுப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.

இருப்பினும், சிலா் இன்னும் பட்டாசுகளை வெடிக்கிறாா்கள். தடையை முழுமையாகக் கடைப்பிடித்திருந்தால் காற்றின் தரம் மேலும் மேம்பட்டிருக்கும்.

தற்போது, காற்று மாசுவுக்கு எதிரான அரசின் பிரசாரம் மற்றும் நடவடிக்கைகள் பெரிய அவில் நடந்து வருகிறது.

வெள்ளிக்கிழமை முதல், தில்லியின் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தலா 2 நீா்த்தெளிப்பு வாகனங்கள், 3

வேளைகளிலும் இயக்கப்படும். சாலைகளில் தூசியைக் குறைக்கவும், மேலும் மாசு அளவைக் குறைக்கவும் தண்ணீா்

தெளிக்கப்படுகிறது என்றாா் கோபால் ராய்.

தேசியத் தலைநகரில் காற்றின் தரத்தை பராமரிப்பதற்கான தொடா்ச்சியான உந்துதலில், தில்லி அரசு சிறப்பு

தூசி கட்டுப்பாட்டு பிரசாரத்தை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.