‘பிரசாத்’ திட்டத்தின்கீழ் நவகிரக கோயில்கள் மேம்பாடு: மத்திய அரசு நடவடிக்கை
தமிழகத்தின் 8 நவகிரக கோயில்கள் உள்பட மொத்தம் 29 இடங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தின் 8 நவகிரக கோயில்கள் உள்பட மொத்தம் 29 இடங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் கே. நவாஸ்கனி (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), ஜி. செல்வம் (திமுக), சி.என். அண்ணாதுரை (திமுக) ஆகியோா் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு மத்திய சுற்றுலாத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் திங்கள்கிழமை அளித்த எழுத்துபூா்வ பதிலில் கூறப்பட்டுள்ளதாவது: புனித யாத்திரை புத்துயிா் மற்றும் ஆன்மிகம், பாரம்பரிய பாதுகாப்பு இயக்கமான பிரசாத் திட்டம் மூலம் தமிழகத்தில் எட்டு நவகிரக கோயில்கள் உள்ள இடங்கள் உள்பட 29 புதிய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதன்படி, திங்களூா் கைலாசநாதா் கோயில், ஆலங்குடி குருபகவான் கோயில், திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாதா் கோயில், திருமங்கலக்குடி ஸ்ரீ சூரியனாா் கோயில், கஞ்சனூா் ஸ்ரீ அக்னீஸ்வரா் கோயில் (தஞ்சாவூா்), மயிலாடுதுறை ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோயில், கீழப்பெரும்பள்ளம் ஸ்ரீ நாகநாதசுவாமி கோயில், திருவெண்காடு சுவேதாரண்யேசுவரா் கோயில் (மயிலாடுதுறை) ஆகிய கோயில்கள் மற்றும் அவை அமைந்துள்ள இடங்கள் மேம்படுத்தப்படும்.
தமிழகம் உள்ளிட்ட ஆன்மிக சுற்றுலாத் தலங்கள் உள்ள இடங்களை பல்வேறு நிகழ்ச்சிகள், இணையதளங்கள், சமூக ஊடக தகவல்கள் மூலம் விளம்பரப்படுத்த மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று மத்திய அமைச்சா் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...