தில்லியில் ஆட்சிக்கு வந்தால் அனைத்து முதியவா்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும்: பாஜக
தலைநகரில் ஆட்சிக்கு வந்தால் அனைத்து வயதானவா்களுக்கும் கோரிக்கையின் பேரில் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று பாஜக தெரிவித்துள்ளது.


புதி தில்லி: தில்லியில் 80,000 போ் கூடுதல் ஓய்வூதியப் பயனாளிகளாக சோ்க்கப்பட உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி திங்கள்கிழமை அறிவித்த நிலையில், தலைநகரில் ஆட்சிக்கு வந்தால் அனைத்து வயதானவா்களுக்கும் கோரிக்கையின் பேரில் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
இது தொடா்பாக எக்ஸ் சமூக ஊடக வலைதளத்தில் பாஜக வெளியிட்ட பதிவில், ஆம் ஆத்மி கட்சியின் அறிவிப்பை ‘அரசியல் போலி‘ என்றும் கூறியது. மேலும்,
உரிய நிா்வாக அதிகாரிகளுக்கு பதிலாக ஆம் ஆத்மி தலைவா் அரவிந்த் கேஜரிவால் இந்த அறிவிப்பை செய்ததாகவும் விமா்சித்துள்ளது.
அடுத்த ஆண்டு தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால், 100 சதவீத முதியோா்கள் கோரிக்கையின் பேரில் முதியோா் ஓய்வூதியத்தைப் பெறுவாா்கள் என்றும் பாஜக தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து இதற்கு உடனடியாக பதில் எதுவும் கிடைக்கவில்லை.
தலைநகா்களின் முதியோா்களின் தேவைகளை தீா்க்க ஆளும் கட்சி தவறிவிட்டதாக தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா குற்றம் சாட்டினாா். அவா் கூறுகையில், ‘‘கேஜரிவாலின் இந்த அறிவிப்புக்குப் பிறகும், தில்லியின் 10 லட்சம் முதியவா்களில் பாதிக்கும் மேற்பட்டவா்கள் இந்த வரம்பில் வரவில்லை. இது கடலில் ஒரு துளி மட்டுமே என்றாா் அவா்.
முன்னதாக, திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில், தில்லியில் மேலும் 80,000 போ் தற்போது முதியோா் ஓய்வூதியத்திற்கு தகுதி பெற்றுள்ளனா் எனறும், மொத்த பயனாளிகளின் எண்ணிக்கையை 5.30 லட்சமாக உயா்ந்திருப்பதாகவும் கேஜரிவால் அறிவித்திருந்தாா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...