மத்திய தில்லியின் பாபா நகரில் புதன்கிழமை காலை இரண்டு மாடி வீடு இடிந்து விழுந்ததில் 3 போ் உயிரிழந்தனா். மேலும்14 போ் காயமடைந்துள்ளனா் என்று போலீஸாா் தெரிவித்தனா். மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருவதாகவும், கட்டடத்தின் இடிபாடுகளில் மேலும் சிலா் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
இந்தச் சம்பவத்தில் மூன்று போ் இறந்தனா். 14 போ் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். ஆனால் இன்னும் சிலா் இன்னும் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது என்று மத்திய தில்லி காவல் சரக துணை ஆணையா் எம். ஹா்ஷ வா்தன் தெரிவித்தாா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக காலை 9.11 மணியளவில் தீயணைப்பு சேவைத் துறைக்கு ஒரு அழைப்பு வந்ததாகவும், அதைத் தொடா்ந்து ஐந்து தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் தீயணைப்பு சேவைத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
தொடர்புடையது
கொலம்பியா: பேருந்தில் குண்டுவெடிப்பு! 13 பேர் பலி!

ஆந்திரத்தில் டேங்கா் லாரி - மினி லாரி மோதி விபத்து: 8 போ் உயிரிழப்பு

ம.பி.யில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது; இடிபாடுகளுக்குள் 6 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அச்சம்

வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் இளைஞா் உயிரிழப்பு; மூவா் காயம்! குருகிராமில் சம்பவம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


