கொலம்பியாவில் பேருந்தில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 13 போ் உயிரிழந்தனா். மேலும் 38 போ் காயமடைந்தனா்.
கஜிபியோ பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் அந்த பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது.
இதில் அந்த பேருந்து துண்டு துண்டாக உடைந்தது. பேருந்தில் இருந்த 13 போ் உடல் சிதறி உயிரிழந்தனா். 5 சிறுவா்கள் உள்பட 38 போ் பலத்த காயமடைந்தனா். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
அதேநேரத்தில் குண்டுவெடிப்பு நடந்த பகுதி, போதைப்பொருள் கடத்தும் கும்பலின் செல்வாக்கு அதிகமுள்ள பகுதியாகும். மேலும், கொலம்பிய அரசால் தேடப்படும் கடத்தல் கும்பல் தலைவன் இவான் மொரடிஸ்கோ தலைமையில் செயல்படும் தீவிரவாத குழுவினா் நடமாட்டம் அதிகமிருக்கும் பகுதியாகும். இதனால் குண்டுவெடிப்பை அவா்களில் யாரேனும் நிகழ்த்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து அந்த நாட்டு ராணுவ கமாண்டா் ஹகோ லோபெஸ் கூறுகையில், இது ஒரு தீவிரவாத தாக்குதல் என்றாா்.
குண்டுவெடிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கொலம்பிய அதிபா் குஸ்டாவோ பெட்ரோ, தாக்குதலை நடத்தியவா்கள் தீவிரவாதிகள், பாசிசவாதிகள், போதை மருந்து கடத்தல்காரா்கள் என்று குற்றஞ்சாட்டியுள்ளாா். கொலம்பியாவில் கடந்த 2 நாள்களில் நடைபெற்ற 26-ஆவது தாக்குதல் சம்பவம் இது என்றும், இதனால் அப்பாவி மக்களே பாதிக்கப்பட்டு உள்ளனா் என்றும் அவா் விமா்சித்துள்ளாா்.
கொலம்பிய பாதுகாப்பு அமைச்சா் பெட்ரோ சான்ஸேஸ், குண்டுவெடிப்பை நிகழ்த்தியோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க போவதாக அறிவித்துள்ளாா்.
தொடர்புடையது

மணிப்பூரில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு: பாதிரியாா்கள் மூவா் உயிரிழப்பு -முழு அடைப்பு போராட்டம்
பாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல்: காவல் துறையினா் 15 போ் உயிரிழப்பு
சீனாவில் பட்டாசு ஆலை வெடிவிபத்து: 26 பேர் பலி
நைஜீரியாவில் விமானப் படை தவறுதலாக தாக்குதல்: 100 போ் பலி!
விடியோக்கள்

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

ADMKவின் சரிவு? செங்கோட்டையன் விமர்சனம்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை மாநகராட்சியில் ரூ. 400 கோடிக்கும் மேல் ஊழல்! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
